பக்கம்:கவி பாடலாம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஆசிரிய விருத்தம்

ஆசிரிய விருத்தம் ஆறுசீர் முதல் எத்தனை சீராலும் அளவொத்த நான்கு அடிகளால் வருமென்பதைத் தொடக் கத்திலேயே பார்த்தோம். பிற்காலக் காப்பியங்களில் பெரும் பாலானவை ஆசிரிய விருத்தத்திலே அமைந்திருக்கின்றன. பழங்காலத்தில் தொல்காப்பியத்தின்படி கொச்சகம் என்று அடக்கிக் கொள்வதற்கு உரியனவாக உள்ள சில பாடல்கள் யாப்பருங்கலக் காரிகையின்படி ஆசிரிய விருத்தத்தில் அடங்குவனவாக இருக்கும். சிலப்பதிகாரத்தில் வரும் ஆற்று வரி, கொச்சகம் என்று பெயர் பெறும். ஆயினும் அது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின்பாற்படுவதைக்

காணலாம்.

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ வாடை யதுபோர்த்துக்

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி காவேரி

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்த வெல்லாம் நின்கணவன்

திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி,”

இந்த ஆற்றுவரிப் பாட்டு. அரையடிக்கு இரண்டு மாவும், ஒரு காயுமாக வந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இருப்பதைக் காண்க. r

இவ்வாறு வந்த ஆசிரிய விருத்தம் நாளடைவில் பலவகைச் சந்தங்களை உடையதாய்ப் பெருகிப் பரந்து வளர்ந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/163&oldid=655759" இலிருந்து மீள்விக்கப்பட்டது