பக்கம்:கவி பாடலாம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரிய விருத்தம் - i85

மேனி லாவஅவள் பால தாகமிகு மாலொ டேகியவன்

வேத வேள்விநணி காப்பவன் ஆனை மாமுகவ னார்பி னேஉதய மான மாகுமரன்

ஆறு வீடுடைய நாதனே. இது ஒன்பதின் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

‘கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு

கூடி நீடும் ஓடை நெற்றி

வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத

நர்த வென்று நின்று தாழ

அங்க பூவ மாதி யாய ஆதி நூலின் நீதியோதும் ஆதி யாய

செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர்

சோதி சேர்ந்த சித்தி தானே.”

இது பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். “பேரா தரிக்கும் அடியவர்தம்

பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்

பெருமான் என்னும் பேராளா சேர நிருதர் குலகலகா

சேவற் கொடியாய் திருச்செந்துர்த்

தேவா தேவர் சிறைமீட்ட

செல்வா என்றுன் திருமுகத்தைப் பாரா மகிழ்ந்து முலைத்தாயர்

பரவிப் புகழ்ந்து விருப்புடன்அப்

பாவா வாளன் றுனைப்போற்றிப்

பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ - -

வடிவேல் முருகா வருகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/166&oldid=655762" இலிருந்து மீள்விக்கப்பட்டது