பக்கம்:கவி பாடலாம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ο கவி பாடலாம்

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். அம்போ தரங்கம் என்பதற்கு நீரின் அலை என்று பொருள். கரையை அடைய அடைய அலையின் உயரம் சுருங்குவது போல இருப்பதனால் இந்தப் பெயர் அமைந்தது. முதலில் நாற்சீரடி, பிறகு முச்சீரடி, பின்பு இருசீரடிகளாக அமைவது இந்த உறுப்பு. நாற்சீரடிகள் இரண்டு அமைந்தவை இரண்டு, நாற்சீர் ஓரடி நான்கு, முச்சீரடி எட்டு, இரு சீரடி பதினாறு இவை அமைந்து அம்போதரங்கம் வரும். நான்கு, எட்டு, பதினாறு என்பவை அவற்றிலே பாதியாக வருவதும் உண்டு.

அம்போதரங்க உறுப்பை அசையடி, பிரிந்திசைக் குறள், சொற்சீரடி, எண் என்றும் கூறுவர். நாற்சீர் ஈரடி களைப் பேரெண் என்றும், நாற்சீர் ஓரடிகளை அளவெண் என்றும், முச்சீர் ஒரடிகளை இடையெண் என்றும், இருசீரடிகளைச் சிற்றெண் என்றும் சொல்வார்கள்.

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு உதாரணம் வருமாறு:

(தரவு)

“கெடலரும் மாமுனிவர் கிளந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய அழலுவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க வார்புனல் இழிகுருதி அகலிட முடிநனைப்பக் கூருகிரால் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/171&oldid=655768" இலிருந்து மீள்விக்கப்பட்டது