பக்கம்:கவி பாடலாம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கவி பாடலாம்

போரவுணர்க் கடந்தோய் நீ, (1) புணர்மருதம் பிளந்தோய் நீ, (2) நீரகலம் அளந்தோய் நீ, (3) நிழல்திகழ்ஐம் படையோய் நீ. (4)

(இவை இடையெண்)

ஊழி நீ, உலகும் நீ, (1-2) உருவும் நீ, அருவும் நீ, (3-4) ஆழி நீ, அருளும் நீ, (5-6) அறமும் நீ, மறமும் நீ (7-8)

(இவை சிற்றெண்)

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)

அடுதிறல் ஒருவன்நிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்று முதிர்கடல் உலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே.”

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலியில் தரவு ஆறடியாகவே வரும்.

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

ஒத்தாழிசைக் கலிப்பாவில் மூன்றாவது வகை வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. வண்ணகம் என்பது ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/173&oldid=655770" இலிருந்து மீள்விக்கப்பட்டது