பக்கம்:கவி பாடலாம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8O கவி பாடலாம்

கிணைமலர்த்தா ரருளுமேல்

இதுவதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார்

துணையாகக் கருதாரோ.

அதனால் செவ்வாய்ப் பேதை இவள்திறத் தெவ்வாறாங்கொல்இஃ தெண்ணிய வாறே.”

இந்தத் தரவினைக் கொச்சகக் கலிப்பாவில் என வாங்கு என்றும், அதனால் என்றும் இடையிலும் பின்னும் தனிச் சொல் வந்தது காண்க.

சுரிதகம் இன்றியும் தரவினைக் கொச்சகம் வரும்.

முந்நான்கு திருக்கரத்து முருகவேள் தனைப்பணிந்தார் இன்னாங்கு தவிர்ந்தென்று மின்டவாழ் வடைவரெனப் பன்னாளும் பெரியோர்கள் பாடுவது கேட்டிருப்போம்;

அதனால் பிறவியெனும் பிணிதொலையப் பிணிமுகமேற் கொண்டருளி அறவுருவாம் தேவியர்கள் அணைந்திருபா லுஞ்சுடரத் திறவிதின்நற் பவனிவரும் திருவுருவைப் ப்ோற்றுதுமே. இரண்டு தரவு வர, இடையே தனிச் சொல் வந்த தரவினைக் கொச்சகக் கலிப்பா இது.

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் இடையிடையே தனிச் சொல்லும் இறுதியில் சுரிதகமும் பெற்று வருவது சிஃறாழிசைக் கலிப்பா.

‘பரூஉத்தடக்கை மதயானைப்

பனையெருத்தின் மிசைத்தோன்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/181&oldid=655779" இலிருந்து மீள்விக்கப்பட்டது