பக்கம்:கவி பாடலாம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா 189

ஒன்றாகிய கலம்பகத்தில் முதல் பாட்டு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகவே இருக்கும். இங்கே காட்டிய பாடல் குமர குருபர முனிவர் இயற்றிய மதுரைக் கலம் பகத்தில் உள்ள முதற் பாட்டு.

யாப்பருங்கலக் காரிகையில் மேற்கோளாகக் காட்டி யிருக்கும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வருமாறு:

(தரவு)

“மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்

நுரைநிவந்தவையன்ன நொப்பறைய சிறையன்னம் இரைநயந் திரைகூடும் எமஞ்சார் துறைவகேள். (1)

வரையெனக் கழையென மஞ்செனத் திரைபொங்கிக் கரையெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கலா தெழுமுன்னி பரந்தொழுகும் ஏமஞ்சார் துறைவகேள். (2)

- (தாழிசை)

கொடியுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால். (1) கண்கவரு மணிப்பைம்பூண் கயில்கவைய சிறுபுறத்தோள் தெண்பனிநீ ருகக்கண்டும் திரியலனே என்றியால். (2)

நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால், (3)

கனைவரல்யாற்றிருகரைபோல் கைநில்லாது.ண்ணெகிழ்ந்து நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/190&oldid=655789" இலிருந்து மீள்விக்கப்பட்டது