பக்கம்:கவி பாடலாம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கலிப்பாவின் இனம்

கிலிப்பாவுக்கும் மூன்று இனங்கள் உண்டு. (1) க்லித்தாழிசை, (2) கலித்துறை, (3) கலிவிருத்தம் என்பன

f Y1.

கலித்தாழிசை

அடி வரையறை இல்லாமல் இரண்டடி முதல் எத்தனை அடிகளாலும் வந்து, ஈற்றடி மற்ற அடிகளைவிடச் சீர்கள் மிக்கு நீண்டு வருவது கலித்தாழிசை. ஈற்றடியை அன்றி மற்ற அடிகள் தம்முள் அளவொத்தும், அளவு ஒவ்வாமலும் வரும். இவை ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்தால் சிறப்புடையன என்று சொல்வார்கள். ஆதலின் கலித்தாழிசை மூன்று வகைப்படுவதைக் காணலாம்.

“வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்

கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தின் எழாலாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்.’

இந்தப் பாடலில் முன் மூன்று அடிகளும் நான்கு சீர்களை உடையனவாய், ஈற்றடி ஐந்து சீர்களை உடையதாய் வந்தன.

வெள்ளமென அன்புடைய வித்தகருக் கெந்நாளும் தள்ளரிய இன்பந் தருவான் குறவள்ளிக் குள்ளுடைய அன்போங்க உற்ற திருக்கோலம் நள்ளுகின்றகொல்லியிலேநானளும்கொண்டுறுவான் நண்ணுதிரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/193&oldid=655792" இலிருந்து மீள்விக்கப்பட்டது