பக்கம்:கவி பாடலாம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிப்பாவின் இனம் 193

இந்தப் பாடலும் முதல் மூன்றடிகளும் அளவொத்து நிற்ப, ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்த கலித்தாழிசை, -

“பூண்ட பறையறையப் பூதம் மருள

நீண்ட சடையானாடுமே நீண்ட சடையானாடு மென்ப மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.”

இந்தச் செய்யுளின் ஈற்றடி ஏனையடிகளினும் மிக்கு, ஐந்து சீர்களால் வந்தது. இரண்டாவது அடி மூன்று சீரால் அமைய, முதலடியும் மூன்றாமடியும் நான்கு சீர்களால் அமைந்தன. இது இடையிடை அளவு குறைந்து, ஈற்றடி அளவு மிக்கு வந்த கலித்தாழிசை

காந்தமா மலையினிற் காணலாம் கந்தவேள் சாந்தமா ருளத்தினர் தாண்மலர் ஏந்துமா மலரினால் ஏத்தியர்ச் சனைசெயப் போந்தஅன் னவர்வினை யாவையும் போக்கியின்

பீவதே.

இந்தப் பாடலும் அத்தகையதே. இவை இரண்டும் இரண்டாவது வகையைச் சார்ந்தன.

“கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்

பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டில்.”

“ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டில்.”

“மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சாரற்

குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டில்.”

இது இரண்டடியாய் ஈற்றடி மிக்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த கலித்தாழிசை,

க. பா.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/194&oldid=655793" இலிருந்து மீள்விக்கப்பட்டது