பக்கம்:கவி பாடலாம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சிப்பாவும் இனமும் 201

மாகத்தினர் மாண்புவியினர் யோகத்தினர் உரைமறையினர் ஞானத்தினர் நயஆகமப் பேரறிவினர் பெருநூலினர் காணத்தகு பல்கணத்தினர்

என்றே இன்னை பல்லோர் ஏத்தும் பெருமான் மன்னவன் காந்த மலையுறை முருகனே.

இதுவும் குறளடி வஞ்சிப்பாவே. இங்கே நிலை மண்டில ஆசிரியப்பாச் சுரிதகமாக வந்தது.

சிந்தடி வஞ்சிப்பாவுக்கு உதாரணம் வருமாறு:

“கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன

வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன. பனையெருத்தி னிணையரிமா னனையேந்தத் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.”

இது, முதல் ஐந்தடிகளும் சிந்தடிகளாக வந்து, பின் ‘புனையென என்னும் தனிச்சொற் பெற்று, பிறகு இரண்டு ஆசிரிய அடிகள் உள்ள சுரிதகம் வந்த வஞ்சிப்பா. முன் அடிகளில் கனிச்சீர்களும், காய்ச்சீர்களும், விளச்சீரும் விரவி வந்தன.

“தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல்

பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி இன்னலத்தகை யிதுவென்ன வெழில்காட்டிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/202&oldid=655802" இலிருந்து மீள்விக்கப்பட்டது