பக்கம்:கவி பாடலாம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சிப்பாவும் இனமும் 2O3

பொருள் மேல் வந்தன. இவை குறளடிகளால் வந்தன. காய்ச்சீரும் விளச்சீரும் விரவி வந்தன. - சூரறுத்த சுடர்வேலன்

சீருறுத்த திருவடியே நாருறுத்து நணுகின்மயல் வேரறுக்க மிளிருமின்பம்.

மாவழித்த வடிவேலன் சேவடிக்கண் திகழன்பு மேவுவர்க்கு வீணாசை போவதுற்றுப் பொலியுமின்பம் மலைபொடித்த வடிவேலன் நிலைபிடித்த நிகரடியே தலைபிடித்துச் சார்பவருக் கிலைவருத்தம் இலகுமின்பம். இவை மூன்றும் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கிக் குறளடிகளால் வந்தமையின் வஞ்சித் தாழிசையாகும்.

வஞ்சித்துறை: இரு சீரடியாகிய குறளடி நான்காய்த் தனியே வருவது.

‘மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திர்ல விளங்கிழாய்.” இது அவ்வாறு வந்தது காண்க.

எண்ணருங்கந் தன்புகழ் பண்ணொடுஞ்சொ லன்பினர் மண்ணுயர்ந்தின் பந்தர விண்ணகஞ்சென் றொன்றுவர்.

இதுவும் வஞ்சித்துறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/204&oldid=655804" இலிருந்து மீள்விக்கப்பட்டது