பக்கம்:கவி பாடலாம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கவி பாடலாம்

ஒசை சிதையுமென்று தோன்றும் இடங்களில் அவ் விரண்டையும் கணக்கிடக் கூடாது. அவை அலகு பெறாத எழுத்துக்களாகவே கொள்ளப்படுளம். மெய்யெழுத்துக்கள் யாப்பிலக்கணத்தில் அலகு பெறுவதில்லை. அது போலவே குற்றியலிகரத்தையும் குற்றியலுகரத்தையும் கொள்ள வேண்டும். -

‘சிறுநன்றி இன்றியவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் - பெருநன்றி மன்னும் பெரிதென்-றுறுநன்றி

தானவாய்ச் செய்வதுஉம் தானமன் றென்பவே வானவாம் உள்ளத்த வர்.’ இந்தப் பாட்டில் முதலடியில் இரண்டாம் சீர், ‘இன்றிவர்க்கியாம்’ என்பது. இதற்கு உள்ளபடியே வாய்பாடு அமைத்தால் கூவிளங்கனி ஆகும். கணிச்சீர் வெண்பாவில் வராது. ஆகவே கி என்ற குற்றியலிகரத்தைக் கணக்குப் பண்ணாமல் க் என்ற எழுத்தைப் போல அலகு பெறாமல் வைத்து வாய்பாடு கூற வேண்டும் அப்போது அது கூவிளங்காய் ஆகும்.

‘அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் றினல்.”

என்ற திருக்குறளில் முதலடியில் இரண்டாம் சீரில் ‘தியாதெனில் என்பதிலுள்ள தி குற்றியலிகரம். அதற்கு அலகு உண்டென்று கொண்டால் இரண்டாம் சீர் கருவிளம் ஆகும். முதற்சீர் புளிமாங்காய். காய்முன்நிரை வந்தால் அது கலித்தளையாகிவிடும்; பாட்டுப் பிழையாகிவிடும். ஆகவே தி என்ற எழுத்தைக் கணக்கிற் சேர்க்காமல் த் என்ற எழுத்து நிற்பது போல வைத்து வாய்பாடு சொல்ல வேண்டும். அப்போது அது கூவிளமாகிவிடும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/211&oldid=655813" இலிருந்து மீள்விக்கப்பட்டது