பக்கம்:கவி பாடலாம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்து கொள்ள வேண்டியவை 21 1

குற்றிய லிகரம் மெய்க்குரிய அரை மாத்திரையே உடையதாதலின் உச்சரிக்கும் போது அந்த எழுத்து மெய்யைப் போலவே ஒலிக்கும். அருளல்லத் யாதெனின் என்று சொல்லிப் பார்த்தால், அருளல்ல தியாதெனின் என்பதும் அதேபோல ஒலிப்பதைக் காணலாம். அதனால் தான் அவசியமானபோது அது அலகு பெறாமல் நின்றது.

இவ்வாறே குற்றியலுகரமும் அலகு பெறாமல் நிற்பது உண்டு. அது மிக அருமையாகவே இருக்கும்.

குற்றியலிகரம் அலகு பெறுவது இயல்பு.

‘வந்துநீ பேரின் உயிர்வாழும் வாராக்கால்

முந்தியாய் பெய்த வளைகழலும்-முந்தியாம் கோளானே கண்டநம் கோல்குறியாய் இன்னுமோர் நாளானே நாம்புணரு மாறு.”

இந்தப் பாட்டில் இரண்டாம் அடியின் முதற் சீராகிய முந்தியாய் என்பதில் தி என்னும் குற்றியலிகரம் வந்தது. அது அலகு பெற்றமையால் அச்சீர் கூவிளமாக நின்று அடுத்து நேரசை வர வெண்டளை அமைந்தது. அவ்வடியே தனிச் சொல்லிலும் இருப்பதைக் காண்க.

பொதுவாக அளபெடைகள் ஓசைகெட வரும் போது வருபவை. ஆயினும் சில இடங்களில் வரும் உயிரள பெடை அலகு பெறாமல் நிற்பதும் உண்டு.

‘இடைநுடங்க ஈர்ங்கோதை பின்தாழ வாட்கண்

புடைபெயரப் போழ்வாய் திறந்து-கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு.”

இந்த வெண்பாவில் மூன்றாம் அடியின் முதற்சீரில் அளபெடை வந்தது. அதைக் கணக்குப் பண்ணினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/212&oldid=655814" இலிருந்து மீள்விக்கப்பட்டது