பக்கம்:கவி பாடலாம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 -o

நல்ல கவிகள் 213

தளை தவறும். எஃ என்பது ஒரசைச் சீராகவும் வெஃகு என்பது தேமாவாகவும் நின்று இலக்கணத்தோடு மாறுபடும். ஆய்தம் அளபெடுத்து ஒரெழுத்தைப் போலக் கணக்குப் பண்ணும்படி நிற்பதனால் ‘தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்-தேமாங்காய் தேமாங்காய் காசு என்ற வாய்பாடு அமைந்து, வெண்டளை பிறழாமல் நின்று குறள் வெண்பாவின் இலக்கணம் நிரம்பி நிற்கிறது பாட்டு.

இவ்வாறு மிகவும் அருமையாக வரும் இலக்கணங்களை யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தியுரை என்னும் நூல்களில் கண்டு கொள்ளலாம்.

18. நல்ல கவிகள்

து வரையில் சொன்ன இலக்கணங்களை யெல்லாம் அறிந்து கொண்டு பிறகு கவிபாடப் புகுவது என்பது இயலாத காரியம். பலமுறை பழம்புலவர்கள் பாடிய கவிகளைப் படித்துப் பார்த்து அவற்றின் ஒசை யமைதியைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே கூறிய இலக்கணங்களில் எவை எவை அவற்றில் அமைந் திருக்கின்றன என்று ஆராய்ந்து அறிய வேண்டும். கருத்து வளமும் சொல் வளமும் உள்ளவர்களே நல்ல கவிதை பாடலாம். கவிதையில் அமையும் கவிதைத் தன்மை யென்பது பாடுவோரின் உள்ளுணர்வைப் பொறுத்தது. கவிதையிலுள்ள யாப்பமைதி அல்லது செய்யுட்டன்மை இத்தகையதென்று சுட்டிக் காட்டலாம். யாப்பிலக்கணம் கற்றவர்கள் இலக்கணப் பிழை இல்லாமல் செய்யுட் பாடலாம். ஆனால் அது கவிதையாக இருக்கும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/214&oldid=655816" இலிருந்து மீள்விக்கப்பட்டது