பக்கம்:கவி பாடலாம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளும் இசைப்பாடலும் 2 19

உருவம் சொல்; அதன் மணத்துக்குக் காரணமான தாது பொருள். சிறிய உருவமும் வெண்மை நிறமும் படைத்த மல்லிகை மாலையையே சொல்கிறார். மல்லிகையில் வண்ண ஆடம்பரம் இல்லை. ஆனால் பழங்காலத்தில் அது தான் எல்லா மலர்களிலும் சிறந்தது என்ற கருத்து இருந்து வந்தது. இந்தப் பாடல் பொருளின் சிறப்பைச் சொல்கிறது. உருவ ஆடம்பர மின்றிப் பொருட் சிறப்புள்ள கவிதை யையே இந்தப் பாடலை இயற்றினவர் தம் கருத்திற் கொண்டிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் கொச்சக வகையில் அமைந்த சில வரிப் பாடல்கள் இருக்கின்றன. அவை இக்காலத்து ஆசிரிய விருத்தங்களில் சேரும். அவற்றைப் பண்ணுடன் பாடும் இசைப் பாடல்களாகவே இளங்கோவடிகள் இணைத் திருக்கிறார். இயற்றமிழில் பாட்டின் வடிவத்தில் ஆடம்பரம் இல்லை. இசைத் தமிழிலோ பண்ணுக்கும் தாளத்துக்கும் இடம் உண்டு.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனை இசையுடன் பாடினார்கள்; தாளமிட்டுப் பாடினார்கள். பலவகை ஆசிரிய விருத்தங்கள் பெருகின. புதிய புதிய சந்தங்கள் வந்தன. இசைப் பாட்டுக்களே இயற் பாட்டுக்களாக வந்துவிட்டன. மெல்லமெல்ல அகவலும் வெண்பாக்களும் பின்னே நிற்கத் தொடங்கின. சீவக சிந்தாமணிமுதல் விருத்தம் முன்னிடத்தைப் பெற்றுக் கொண்டது. அளவொத்த ஓசையையுடைய அடிகளைப் பெற்ற விருத்தங்களைப் புலவர்கள் ஆயிரக் கணக்கில் பாடினார்கள். புதிய புதிய சந்தங்களில் விருத்தங்களைப் பாடினார்கள். பெரிய நூல்களை இயற்றும் கவிஞர் யாவரும் விருத்தத்தையே ஆண்டனர். கவிச்சக்கரவர்த்தி கம்பனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/220&oldid=655823" இலிருந்து மீள்விக்கப்பட்டது