பக்கம்:கவி பாடலாம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கவி பாடலாம்

பாரதம் பாடிய வில்லியும், நைடதம் பாடிய அதிவீரராம பாண்டியனும், கந்தபுராணம் பாடிய கச்சியப்பரும், தல புராணங்களைப் பாடிய பல புலவர்களும் விருத்த வகைகளில் வையாளி நடைபோட்டனர். இதனால் பாவினங்களில் விருத்தம் மட்டும் பெருகின.

இடையிலே மற்ற வகைப் பாடல்களையும் உயிருடன் இருக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களைப் போலக் கலம்பகம் என்ற பிரபந்தம் ஒன்றைப் புலவர்கள் பாடினர். அதில் எல்லா வகைப் பாக்களும் பாவினங்களும் கதம்பமாக இருந்தன. பலவகைச் செடி கொடிகளின் மாதிரிகளைப் பயிரிட்டு வைத்திருக்கும் மாதிரித் தோட்டம் (Botanical Garden) போல அது இருந்தது.

நாளாக ஆகத் தாளம் போட்டுப் பாடும் பாடல் களாகிய இசைப் பாடல்களும் இயல் தமிழ் இலக் கியங்களில் புகுந்தன. பள்ளு, குறவஞ்சி போன்ற பிரபந்தங் களை இயற்றமிழ்ப் புலவர்கள் பாடினர். பாரதியார் பல இசை வடிவங்களையே வைத்துப் பாடினார். பாஞ்சாலி சபதம் என்ற காவியமே நொண்டிச் சிந்தில் தொடங்குகிறது. இடையிலே வெவ்வேறு சிந்துகள் வருகின்றன.

சினிமா வந்த பிறகு எத்தனையோ பேர் கவிகளும் இசைப் பாட்டுக்களும் எழுதப் புறப்பட்டுவிட்டார்கள். அவை காற்றோடு காற்றாகப் போய்விடுகின்றன.

இசைப் பாட்டுப் பாடும் பழக்கம் இப்போது மிகுதியாகிவிட்டது. அதற்கும் எதுகை, மோனை, ஒசையமைதி வேண்டும். “இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று’ என்பார்கள். இயல் தமிழில் உள்ள குறையை ராகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/221&oldid=655824" இலிருந்து மீள்விக்கப்பட்டது