பக்கம்:கவி பாடலாம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாவிடைகள் 227


12.

13.

14.

எங்கெல்லாம் அலகு பெற்றால் ஒசை மிகும் என்று தோன்றுகிறதோ அங்கெல்லாம்.

“அற்றால் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.”

இக் குறட்பாவில் தீர்த்தல்-அஃதொருவன் என்பதனை அலகிட்டு வாய்பாடும் தளையும் கூறின் தளை தட்டுகிறது. ஆய்தத்தை எப்படி வைத்துக் கொண்டாலும் வழு உண்டாகிறது. அமைதி யாங்ஙனம்?

ஆய்தம் ஓரலகு பெற்றது. அதாவது அங்கே குற்றெழுத்திருந்தால் எப்படி அலகிட வேண்டுமோ, அப்படிக் கொள்ள வேண்டும். அஃதொருவன் என்பதை ‘அகுதொருவன்’ என்று உச்சரித்தால் வேறுபாடு தோன்றாது. கருவிளங்காய் என்று வாய்பாடு கொண்டாமல் மாமுன் நிரையாகிய இயற்சீர் வெண்டளை அமைதல் காணலாம்.

மாத்திரை என்றால் என்ன?

காலக் கூறுபாட்டின் அளவு. இமையை இமைக்கும் நேரமும், கை விரலை நொடிக்கும் நேரமும் மாத்திரைக்கு அளவாகும்.

‘உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு’ இதில் முதலடியில் போலும் என்ற தேமா முன் நேர் வந்தது எவ்வண்ணம்?

சீர் பிரித்தது தவறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/228&oldid=655831" இலிருந்து மீள்விக்கப்பட்டது