பக்கம்:கவி பாடலாம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாவிடைகள் 23 |

28.

சிந்தாமணியில் வரும் இந்தக் கலி விருத்தத்தில் நாலடிகளிலும் ஒரெதுகை வரவில்லையே!

இதில் மெல்லின எதுகை வந்தது.

‘உலக மூன்றும் ஒருங்குடன் ஏத்துமொண்

டிலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றலாம் தொழுவில் தொல்வினை நீங்குக வென்றல்போல்.”

இந்த விருத்தத்தில் இரண்டு விகற் பங்கள் வந்தது பிழை அன்றா?

இதில் சிறப்பில்லாத இடையின எதுகை வந்தது.

விகற்பம் என்றால் என்ன?

விகற்பம் என்ற சொல்லுக்கு வேறுபாடு என்று பொருள். யாப்பிலக்கணத்தில் எதுகை வேறு பாட்டைக் குறிக்க அச்சொல் ஆளப்படும். ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா என்று ஒரே எதுகையில் வந்தால் கூறுவார்கள். முன் இரண்டடி யும் ஒரெதுகையாகவும், பின் இரண்டடியும் ஒரெது கையாகவும் வந்தால் அது இரு விகற்ப நேரிசை வெண்பா என்று சொல்லப்பெறும்.

கவிதையில் நாட்டங் கொண்டு கற்றிட முயன்றேன்யானும் கவினுற வமைய வேண்டிக் கற்பனை செய்தேன்யாக்க மேவிய விருப்பத்தாலே மெள்ளவே பார்த்து விட்டேன் கவியதைத் திருத்தம் செய்வீர் கவனத்திற் கனுப்பி

வைத்தேன். இதில் மூன்றாவதடியில் முதல் எழுத்துக் குறிலாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கே எதுகை அமையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/232&oldid=655836" இலிருந்து மீள்விக்கப்பட்டது