பக்கம்:கவி பாடலாம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

31.

32.

33.

36.

கவி பாடலாம்

‘கவியுறு விருப்பத்தாலே கருதியே யாத்துவிட்டேன்’ என்பது போல வரலாம். மோனை அமைய வேண்டிய இடத்தில் எதுகை அமைந்தால் மோனை இல்லையே என்ற குறை இராது என்று கூறுகிறீர்களே, ஆசிரியப்பாவுக்கு மட்டுந்தான் இவ்விதியா?

ஆம். எதுகையில் வ வுக்கு வி யும் வாவும் சில பாடல்களில் இருக்கின்றன? சரியா? இருக்கலாம். குறிலுக்குக் குறிலே இருப்பது சிறப்பு. செய்யுளில் ஒரடியில் ‘இப்படி என்றும் மற்றோரடியில் மெய்ப்பரிவு’ என்றும் வருகின்றன. இதில் எதுகைத் தொடை வரவில்லையே! ‘ய்’ என்று இடையில் வந்திருப்பது ஆசு எனப்படும். இது ஆசிடையிட்ட எதுகை அமைந்த இடம். குறட்பாக்களில் எதுகை முதலடியின் முதற் சீரிலும்,

அதே அடியின் 4ஆம் சீரிலும் வரலாமா?

வரலாம். வந்தால் போதாது. அடிக்கு அடி வந்தால் சிறப்பு. வராவிட்டால் பிழை இல்லை. வந்தால் அழகு மிகுதி. - செந்தொடை என்றால் என்ன? மோனை, எதுகை முதலிய தொடைகளில் எதுவும் வராமல் இருப்பது செந்தொடை ஆகும். தொடை இலக்கணம் 13708 வகைப்படும் என்று தொல்காப்பிய உரையில் கூறப்பட்டுள்ளது. இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/233&oldid=655837" இலிருந்து மீள்விக்கப்பட்டது