பக்கம்:கவி பாடலாம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 233


37.

38.

39.

பலவகைத் தொடைகளைப் பெருக்கிக் கணக் கெடுத்து வந்த தொகை அது. எல்லாவற்றுக்கும் எடுத்துக் காட்டுகள் கிடைப்பது அருமை. வெண்பாவின் இனங்களில் ஆசிரியத் தளையும், கலித்தளையும் பயின்று வருவானேன்? வெண்பாவுக்கும், வெண்பா இனத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு அது.

‘தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு.” இதில் ஈற்றுச்சீர் வெண்பா இலக்கணப்படி அமைய வில்லையே. காரணம் என்ன?

நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகள் நான்கில் கதவு என்பது பிறப்பு என்னும் வாய் பாட்டில் அமைந்தது. குற்றியலுகரம் வருவதே

பெரும்பான்மை யாயினும் சிறுபான்மை முற்று .

கரமும் வரும்.

‘அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேசங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.” இது எந்த வகை வெண்பா? இரு குறள் இணைந்த வெண்பா என்னலாமா?

இதைச் சவலை வெண்பா என்று சிலர் கூறுவர். இரு குறள் இணைந்த வெண்பா அன்று இது. இந்தப் பாடலுக்கு ஒரு பாட பேதம் உண்டு. அது வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/234&oldid=655838" இலிருந்து மீள்விக்கப்பட்டது