பக்கம்:கவி பாடலாம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

43.


கவி பாடலாம்

‘அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்-கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் தான்மிக்க வெண்மை தரும்.”

வெண்பாவின் இரண்டாவது அடி தனிச் சீரின்றி முச்சீராக அமைந்திருந்தால் சவலை வெண்பாவாகக் கருத வேண்டுமா?

ஆம். சவலை வெண்பா என்று சிலர் சொல்வர். பெரியவர்கள் அப்படிச் செய்வதால் அதனை ஆரிடம் என்று அமைப்பர்.

காரிகையில் பாவை விளக்கும் ஆசிரியர் ஒரொலி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாரே. அது பாவின் இலக்கணத்தில் எந்த வகையைச் சார்ந்தது?

ஒரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை என்று இரு வகை உண்டு. வெண்டுறை இலக்கணத்தைச் சொல்லும் போதுதான் ஒரொலி என்பது வருகிறது. ஒரே வகைச் சீர்களால் வருவது ஒரொலி வெண்டுறை. முற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் சீர் வேறுபாட்டால் ஒலி மாற்றம் நிகழ்ந்தால் அது வேற்றொலி வெண்டுறையாகும்.

வெளி விருத்தத்தில் ஒவ்வோர்.அடியும் ஒரு கருத்தைத் தாங்கி முடிகிறது. இதன் அடிகளைப் பெரும் பாலும் மறித்துப் போட வாய்ப்பு உண்டு. எனவே வெளி விருத்தத்தை அடிமறிமண்டில விருத்தம் என்று கூறலாமா?

அடிமறிமண்டில ஆசிரியப்பா என்பதுதான் உண்டு. விருத்தத்தில் அப்படி ஒன்றும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/235&oldid=655839" இலிருந்து மீள்விக்கப்பட்டது