பக்கம்:கவி பாடலாம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடை:ள் 247

75.

76.

77.

78.

கிரந்தம் என்றால் என்ன? காரிகைச் செய்யுள் ஒவ்வொன்றும் எத்தனை கிரந்தம் கொண்டது?

மெய்யெழுத்தைக் கணக்குப் பண்ணாமல் மற்ற வற்றில் முப்பத்திரண்டு வந்தால் அது ஒரு கிரந்தம். நேரசை முதலாக வந்த காரிகையில் அறுபத்து நான்கு எழுத்துக்கள் இருக்கும். அதில் இரண்டு கிரந்தங்கள் இருக்கும். நிரையசை முதலாக வந்த காரிகையில் அறுபத்தெட்டெழுத்துக்கள் இருக்கும். அவை இரண்டு கிரந்தங்களும் நான்கு எழுத்தும் ஆகும். கலிப்பாவினாலேயே அமைந்த தனி நூல் ஏதேனும்

உண்டா?

கலித்தொகை என்ற சங்க நூல் நூற்றைம்பது கலிப்பாக்களால் அமைந்தது.

இன்ன பாடலுக்கு இன்ன ராகம் என்ற வரையறை ஏதாவது உண்டா?

அப்படித் திட்டமாக எதுவும் இல்லை. ஆனால் சில பெரியவர்கள் வெண்பாவைச் சங்கராபரணத்திலும், கட்டளைக் கலித்துறையைப் பைரவியிலும் பாடு வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எளிதில் யாப்பிலக்கணம் கற்க உதவும் நூல் எது? விசாகப் பெருமாள் ஐயர் எழுதிய யாப்பிலக்கண வினாவிடையைப் படிக்கலாம்.

நிறைந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/248&oldid=655855" இலிருந்து மீள்விக்கப்பட்டது