பக்கம்:கவி பாடலாம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கவி பாடலாம்

அமையும் போது நாலு நாலாக அமைந்த மோனைக் கூட்டம் எட்டு எட்டாகச் சில எழுத்துக்களுக்கு அமையும்.

ச-சா-சை-செள-த-தா-தை-தெள என்னும் எட்டிலும் எந்த ஒன்றுக்கும் வேறு எந்த ஒன்றும் மோனையாக வரும். ச-வுக்கு, தெள-வரலாம். செள-க்கு, த.வரலாம். சா-வுக்கு, தை-வரலாம். இப்படியே சி. சு என்ற இரண்டு எழுத்துக் க ைமுதலாக உடைய மோனைக் கூட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ம-மா-மை-மெள-வ-வா-வை-வெள என்பவை ஒரு மோனைக் கூட்டம்.

ஞ-ஞா-ஞை-ளுெள-த-நா-நை-நெள என்பவை ஒரு கூட்டம்.

“நாடிய பொருள் கை கூடும்

ஞானமும் புகழும் உண்டாம்”

என்ற கம்பராமாயணப் பாட்டில் நா-ஞா என்ற இரண்டும் மோனையாக வந்தன.

“சுதந்தர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கி லேனே! என்ற பாரதி பாட்டில் சு-என்ற எழுத்துக்குத் தொ-என்பது மோனையாக வந்திருப்பது காண்க. ச்-என்ற மெய்க்கு

த்-என்ற மெய்யும், உ-என்ற உயிருக்கு ஒ-என்ற உயிரும் மோனையாக வந்தன.

“பச்சையா மலைபோல் மேனிப்

பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே

ஆயர்தம் கொழுந்தே என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/25&oldid=655857" இலிருந்து மீள்விக்கப்பட்டது