பக்கம்:கவி பாடலாம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனை 25

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகரு ளானே’

என்ற திருமாலைப் பாட்டில் இரண்டாவது அடியில் மாத்திரம் அ-வுக்கு ஆ-மோனையாக வந்திருக்கிறது. மற்ற அடிகளில் அந்த அந்த எழுத்தே வந்துள்ளது. இப்படி உள்ள பாடல்களைக் கவனித்து மோனை அமைந்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


இன்ன இன்ன எழுத்துக்கள் மோனையாக வரும் என்று தெரிந்து கொண்டால் போதாது. பாட்டில் இன்ன இடத்தில் மோனை வர வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஒரடியில் எந்த இடத்தில் மோனை வந்தாலும் வரலாம். இடத்துக்கு ஏற்றபடி அதற்கு ஒரு பேர் உண்டு. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். ஆனாலும் இன்ன இடத்தில் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பழக்கத்தால் தெளிவாகும்.

அடியில் சரி பாதியில் மோனை விழுந்தால் அழகாக இருக்கும். ஒவ்வோர் அடியிலும் இத்தனை சீர் என்ற கணக்கு உண்டு. ஆறு சீர் உள்ள பாட்டுக்கு முதலிலும் நான்காவது சீரிலும் மோனை அமைவது அழகு.

“இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுத் திழிவுற் றாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/26&oldid=655859" இலிருந்து மீள்விக்கப்பட்டது