பக்கம்:கவி பாடலாம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கவி பாடலாம்

“இதந்தரு மனையி னிங்கி

இடர்மிகு சிறைப்பட் டாலும்’

என்பது முதல் அடி. இதில் ஆறு சீர்கள் இருப்பதை இடம் விட்டிருப்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கு நாமாக ஒரு மெட்டைப் போட்டுக் கொள்ளலாம்.

தனதன தனன தான

தனதன தனன தான

என்பது இதற்கு ஒசை வாய்ப்பாடு என்று வைத்துக் கொள்ளலாம். இது யாப்பிலக்கணத்தில் இராது. எளிதிலே விளங்குவதற்காக இப்படி வைத்துக் கொள்வதால் தவறு இல்லை.

பாட்டின் அடியையும் இந்த வாய்பாட்டையும் அடுத்தடுத்துச் சொல்லிப் பாருங்கள். இந்த அடியில் முதல் மூன்று சீர்களும், பின் மூன்று சீர்களும் ஒசையில் ஒரே மாதிரி இருக்கும். தயை செய்து இங்கே பொருளைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாதீர்கள்.

இப்போது முதல் மூன்று சீர்களை மட்டும் சிறிது மாற்றிப் பாருங்கள். காதுக்கு ஒசைசரியாக வருகிறதா என்று கவனியுங்கள். -

தனன தனதன தான

என்பதற்கும்,

தனதன தனன தான

என்பதற்கும் ஓசை வேறுபாடு தெளிவாக இருக்கிறது. இந்த வாய்பாட்டை மறந்துவிட்டு வார்த்தைகளின் பொருளையும் மறந்துவிட்டுப் பாட்டில் உள்ள சீர்களை மாற்றினாலும் ஒசை வேறாகவே தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/33&oldid=655867" இலிருந்து மீள்விக்கப்பட்டது