பக்கம்:கவி பாடலாம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அசையும் சீரும்

‘இதந்தரு மனையி னிங்கி’ என்று வரும் பாடல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று தெரிந்து கொண்டோம். புத்தகங்களில் அறு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று பெயர் போட்டிருக்கும் எல்லாமே இந்தப் பாடலைப் போல இருக்கும் என்று எண்ணக்கூடாது. ஒரே ராகத்தில் ஒரே தாளத்தில் பல மெட்டுக்கள் அமைந் திருப்பது போல, ஆறு சீர்கள் கொண்ட விருத்தங்களிலும் பல வகை உண்டு. போன முறை பார்த்த விருத்தத்தைப் போல இன்றி வேறு ஒசையுடன் வரும் அறு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றைக் கீழே

LIITIT BSAH (GM) ff'Ls). -

தண்ணந் தமிழின் பெருமையெலாம்

சாற்ற நம்மால் முடிவதுவோ? எண்ணம் உணர்ச்சி இயற்கைஎழில்

எல்லாம் சொல்லில் வடித்தெழிலார் வண்ண ஓசை கூட்டிநலம் - வாய்த்த கவிகள் புலவர்பலர் திண்ணென் றமைத்தார் அவர்கவிதை

தெரிந்தே இன்பம் அடைவோமே. இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியிலும் ஆறு சீர்களே இருக்கின்றன. ஆனால் பாட்டைப் படித்துப் பார்த்தால், “இதந்தரு மனையி னிங்கி” என்ற பாட்டைப் போல இல்லாமல் வேறு விதமான ஓசை உடையதாகத் தெரிகிறது.

தண்ணந் தமிழின் பெருமையெலாம்

சாற்ற நம்மால் முடிவதுவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/38&oldid=655872" இலிருந்து மீள்விக்கப்பட்டது