பக்கம்:கவி பாடலாம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்பாடுகள் 43

மூன்று அசைகள் சேர்ந்த மூவகைச் சீர்கள் எட்டு.

நேர்நேர்நேர் நேர்நேர்நிரை நிரைநேர்நேர் நிரைநேர்நிரை

நேர்நிரைநேர் நேர்நிரைநிரை நிரைநிரைநேர் நிரைநிரைநிரை

இப்படியே நான்கு அசைகள் சேர்ந்த நாலசைச் சீர்கள் பதினாறு உண்டு. மேலே சொன்ன எட்டு மூவசைச் சீர்களோடு நேர் அசையையும் நிரை அசையையும் சேர்த்தால் பதினாறு சீர்கள் வருவதைக் காணலாம்.

நேர் நேர் நேர் நேர்

நிரை நேர் நேர் நேர்

நேர் நிரை நேர் நேர்

நிரை நிரை நேர் நேர்

நேர் நேர் நிரை நேர்

நிரை நேர் நிரை நேர்

நேர் நேர் நிரை நேர்

நிரை நிரை நிரை நேர்

நேர் நேர் நேர் நிரை

நிரை நேர் நேர் நிரை

நேர் நிரை நேர் நிரை

நிரை நிரை நேர் நிரை

நேர் நேர் நிரை நிரை

நிரை நேர் நிரை நிரை

நேர் நிரை நிரை நிரை

நிரை நிரை நிரை நிரை

இந்த நாலு வகையான சீர்களிலும் ஈரசைச் சீர்களும்,

மூவசைச் சீர்களுமே மிகுதியாகச் செய்யுட்களில் வரும். இந்தச் சீர்கள் நேரை இறுதியாக உடைய சீர்கள், நிரையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/44&oldid=655879" இலிருந்து மீள்விக்கப்பட்டது