பக்கம்:கவி பாடலாம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அறுசீர் விருத்தங்கள்

சீர்கள் நான்கு வகை என்பதையும் அவற்றிற்குரிய வாய்பாடுகள் இன்னவை என்பதையும் தெரிந்து கொண் டோம். வாய்பாட்டைச் சொன்ன மாத்திரத்தில் இன்ன சீர் என்று தெரியும்படி பழகிக் கொள்ள வேண்டும். கீர்த்தனங் களுக்குச்சுவரம் வகுத்தால் அந்தச்சுவரங்களைக் கொண்டே இராக பாவம் அமைந்து விடுவதுபோல, இந்தச் சீர் அமைப் புக்களால் பாட்டின் அடிகளுக்கு உருவம் அமையும். ஆதலின் சங்கீத வித்துவான்கள் இராகத்தையும் கீர்த்தனங் களையும் சுவரம் அமைத்துக் காட்டுவது போல அடிகளை யும் வாய்பாட்டினால் காட்டலாம். இது பழக்கத்தால் வர வேண்டும். மாச்சீர் என்று சொன்னால், முதலில் அது ஈரசைச்சீர் என்று நினைவுக்கு வரவேண்டும். பிறகு நேரை ஈற்றிலே உடைய ஈரசைச்சீர் என்றும் நினைவுக்கு வர வேண்டும். பூச்சீர் என்றவுடன் நாலசைச் சீர்களில் நேராக முடியும் சீர் என்று தெரிந்து கொள்ளும்படி பழக்கம் செய்து கொள்ள வேண்டும்.

யாப்பருங்கலக் காரிகையில், ‘மாஞ்சீர்கலியுட்புகா’ என்று வருகிறது. சீரின் வாய்பாடுகளைத் தெரிந்து கொண்டவர்கள் மாஞ்சீர் என்பது நேர் ஈற்று ஈரசைச்சீர் என்று தெரிந்து கொள்வார்கள். வாய்பாடு இல்லாவிட்டால் இவ்வளவு எளிதிலே சொல்ல இயலாது. நேர் ஈற்று ஈரசைச்சீர் என்று நீளமாகச் சொல்ல வேண்டும். -

அறுசீர் விருத்தமாகிய, “இதந்தரு மனையி னிங்கி” என்று தொடங்கும் பாரதியார் பாடலையே பலவற்றிற்கும் ஊதாரணமாகக் காட்டி இலக்கணத்தை விளக்கி வந்தேன். அந்தப் பாட்டுக்கு வாய்பாடு இன்னது என்று தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/49&oldid=655884" இலிருந்து மீள்விக்கப்பட்டது