பக்கம்:கவி பாடலாம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியப்பா 65

‘கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி

காமஞ்செப் பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே!” இந்தப் பாட்டு எழுந்ததற்குக் காரணமான கதையைப் பலர் அறிந்திருப்பார்கள். கதை உண்மையோ, இல்லையோ அதைப்பற்றி இங்கே கவலை வேண்டாம். ஒரு கதையைப் படர விடுவதற்குக் காரணமான பாட்டு இது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். சங்க நூல்கள் மிகுதியாக வழங்காத இடைக்காலத்திலும் இந்தப் பாட்டு வழங்கி வந்தது. இதை ஆலவாய் இறைவன் பாடல் என்று அந்த வரலாறு கூறுகிறது. -

இந்தப் பாடலில் ஈற்றயலடி மூன்று சீர்களால் அமைந் திருக்கிறது; ஆகவே, இது நேரிசை ஆசிரியப்பா. இதில் இரண்டாவது அடியின் முதற் சீரும், மூன்றாம் அடியின் முதற் சீரும், ஐந்தாம் அடியின் இரண்டாவது சீரும் மூவசைச் சீர்களாக வந்திருக்கின்றன. அவை தேமாங்காய், கருவிளங்காய், புளிமாங்காயாக உள்ளன. எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள் ஆறும் ஆசிரியப் பாக்களால் ஆனவை. அவற்றிற் பெரும்பாலன நேரிசையாசிரியப் பாக்கள். அவற்றை ஆராய்ந்தால் காய்ச்சீர்கள் அங்கங்கே விரவி வந்திருப்பதைக்

35 TG3MTGI)ff{D,

அகவல்களில் ஈறு ஏகாரமாக முடிவது பெரும் பான்மை மரபு. ஓ, ஈ, ஆய், என், ஐ என்று முடிவதும் உண்டென்று இலக்கணம் கூறுகிறது. ஆனால் ஏ என்று முடியும் அகவல்களும், என் என்று முடியும் அகவல்களுமே இப்போது கிடைக்கின்றன. நிலைமண்டில ஆசிரியப்பா

க. பா.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/66&oldid=655903" இலிருந்து மீள்விக்கப்பட்டது