பக்கம்:கவி பாடலாம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΥΟ கவி பாடலாம்

வஞ்சித்தளை யென்பது ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்று இரண்டு வகை ஆக நாலு பாவுக்கும் உரிய நான்கு தளைகள் விரிந்து ஏழு தளைகள் ஆகும்.

தளை என்ற சொல்லுக்குக் கட்டு, விலங்கு என்ற பொருள்கள் உண்டு. இரண்டு ரெயில் பெட்டிகளைச் சேர்ப்பதற்கு இடையே கொக்கி இருப்பது போல இரண்டு சீர்கள் இணையும்போது உள்ள கொக்கி அல்லது சங்கிலி போன்ற அமைப்பையே தளை என்று சொல்வார்கள்.

தமிழ்விடு தூது என்னும் நூலில் தமிழில் உள்ள தளையை எண்ணி வேடிக்கையாக ஒரு புலவர் பாடியிருக்கிறார். பொய்கையார் என்னும் புலவர் களவழி நாற்பது என்ற நூலைப் பாடிச் சேரமானைச் சிறைவிடும்படி செய்தார். ‘சேரமான் காலில் இருந்த தளையை விடும்படி செய்த உனக்கு ஏழு தளை உண்டென்று சொல்வது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என்று அந்தப் புலவர் பாடுகிறார். தமிழைப் பார்த்துச் சொல்வதாக இருக்கிறது அது.

‘சேரமான் தன்னடிக் கண்டு தளைவிடுத்தாய் ஏழ்தளைஉன் பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ?”

மற்றத் தளைகளை யெல்லாம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டாம்; அவற்றைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். வெண்டளையைப் பற்றிய இலக்கணத்தைத் தெரிந்து கொண்டு வெண்பாவின் இலக்கணத்தையும் இப்போது கவனிக்கலாம். -

வெண்டளையின் இலக்கணத்தை எளிதிலே தெரிந்து கொள்வதற்கு நாடோடியாக ஒரு வாய்பாடு வழங்குகிறது. ‘மாமுன் நிரையும் விளமுன் நேரும்: காய்முன் நேரும்: என்பதே அந்த வாய்பாடு. மூன்றே மூன்று விதிகள். மாமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/71&oldid=655909" இலிருந்து மீள்விக்கப்பட்டது