பக்கம்:கவி பாடலாம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்டளையும் பெண்பாவும் 75

எதுகை அமைந்திருப்பதனால், அதைத் தனிச் சீர் என்றார்கள்.

“ஆழ வமுக்கி முகக்கினு மாழ்கடனி

நிாழி முகவாது நானாழி-தோழி நிதியுங் கணவனும் நேர்படினுந் தந்தம் விதியின் பயனே பயன்.”

இந்தப் பாட்டில் இரண்டாவதடியின் முதற்சீர் நாழி: நான்காவது சீர் அதனோடு எதுகையில் ஒன்றிய தோழி: தோழி என்பது தனிச்சீர்.

இந்த வெண்பாவில் முதல் இரண்டடியும் ஒரேதுகை யாகவும் பின் இரண்டடியும் ஒரெதுகையாகவும் உள்ளன. இதுவும் நேரிசை வெண்பாவின் இலக்கணங்களில் ஒன்று. நான்கடியும் ஒரெதுகையாகவும் வரும்.

மேலே காட்டிய பாட்டில் வெண்டளை பிறழாமல் வந்திருப்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். (1) ஆழ-தேமா அமுக்கி-புளிமா-மாமுன் நிரை வந்த

இயற்சீர் வெண்டளை. (2) அமுக்கி-புளிமா; முகக்கினு:கருவிளம்-மாமுன்நிரை

வந்த இயற்சீர் வெண்டளை. (3) முகக்கினு-கருவிளம்; ஆழ்கடனிர்-கூவிளங்காய் =

விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை. (4) ஆழ்கடனிர்-கூவிளங்காய்; நாழி-தேமா=காய்முன்

நேர் வந்த வெண்சீர் வெண்டளை. (5) நாழி-தேமா; முகவாது-புளிமாங்காய்=மாமுன் நிரை

வந்த இயற்சீர் வெண்டளை. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/76&oldid=655914" இலிருந்து மீள்விக்கப்பட்டது