பக்கம்:கவி பாடலாம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

கவி பாடலாம்

இவ்விரண்டி னூடே எழில்பெறவே ஓங்குதமிழ்

சான்றோர் வழிபட்ட தாய்.

இந்த இன்னிசை வெண்பா, நான்கு அடிகளும்

வெவ்வேறு எதுகையாக வந்தமையின் நான்கு விகற்பம் உடையதாயிற்று.

இங்கே காட்டிய மூன்றும் பலவிகற்பத்தால் வந்த

இன்னிசை வெண்பா.

(3) தனிச்சொல் இரண்டாம் அடியிலன்றி மற்ற அடிகளில்

(4)

வருதல்.

குன்றம் கவினும் குறிஞ்சியிலே-நின்றபிரான் வென்றி வடிவேற்கை வீரன் மயிலேறும்

அண்ணல் முருகன் அவனடியே தஞ்சமென

நண்ணுவார்க் கெய்தும் நலம்.

இதில் முதலடியில் தனிச் சொல் வந்தது.

கொல்லிமலை வேளுக் குறிச்சியிலே கோழியினை மெல்லத் துடையிடுக்கி வேட்டுவக்கோலங்கொண்டு வல்ல முருகன் வருமெழிலை-நல்லபடி பார்த்தார் உளம்போம் பறி. -

இதில் மூன்றாம் அடியில் தனிச்சொல் வந்தது.

“மழையின்றி மாநிலர்த்தார்க் கில்லை மழையும் தவமிலா ரில்வழி இல்லைத்-தவமும் அரசிலாரில்வழி யில்லை-அரசனும் இல்வாழ்வாரில்வழி இல்.”

இதில் அடிதோறும் தனிச் சொல் வந்தது.

இரண்டாம் அடியில் தனிச் சொல் பெற்று மூன்று விகற்பத்தாலும் நான்கு விகற்பத்தாலும் வருதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/89&oldid=655928" இலிருந்து மீள்விக்கப்பட்டது