பக்கம்:கவி பாடலாம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கவி பாடலாம்

நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியில் தனிச்சொல் வர, ஒரு விகற்பத்தாலோ இரண்டு விகற்பத் தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா.

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத்-தேடியே கூடி வணங்குமுல கு.

இது ஒரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை நடத்தியவன் காந்தியெனும் நல்லான்-அடற்கெதிரே ஆரேநின்றாற்றுகிற் பார். இது இரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

தனிச் சொல் இன்றி ஒரு விகற்பத்தாலும் இரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. -

கண்ணன் அடியே கருதி வணங்குபவர் எண்ணமெலாம் எண்ணியவாlடேறும் என்பதனைத் திண்ணமாய் நெஞ்சே தெளி.

இது ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

சொல்லிற்குள்ளேபொருளில் தோய்ந்துணர்விலேயூறி நல்லசுவை கண்டுவகை நாட்டமுடையோர்பாவின் இன்பமெலாம் காண்டர் இனிது.

இது இரு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/91&oldid=655931" இலிருந்து மீள்விக்கப்பட்டது