பக்கம்:கவி பாடலாம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஃறொடை வெண்பாவும் கலிவெண்பாவும் 91

தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல் சூழாது நன்மைசெய்யும் துயோர் அறமொன்றே ஆற்றுவார் நல்லோர் அறி. இது மூன்று விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. •.

முதல் அடியில் தனிச்சொல் வந்தாலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவே ஆகும். -

16. பஃறொடை வெண்பாவும் கலி வெண்பாவும்

குறள் வெண்பா இரண்டு அடிகளாலும், சிந்தியல் வெண்பா மூன்று அடிகளாலும், நேரிசை இன்னிசை வெண்பாக்கள் நான்கு அடிகளாலும் வரும் என்று அறிந்தோம். நாலடிக்கு மேற்பட்டு வரும் வெண் பாக்களைப் பற்றி இனிப் பார்ப்போம்.

நான்கு அடிக்குமேல் பன்னிரண்டு அடி வரைக்கும் வரும் வெண்பா பஃறொடை வெண்பாவாகும். இரண்டு அடிக்கு ஒரு தனிச் சொல் பெற்று வந்தாலும், அடி தோறும் தனிச் சொல் பெற்று வந்தாலும், தனிச் சொல்லே இன்றி வந்தாலும் வெண்டளை பிறழாமல் ஈற்றடி முச்சீராய், இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் நான்கு வாய்பாடுகளில் ஒன்றுடையதாய் அமைய வேண்டும். - - -

“வையக மெல்லாங் கழனியா வையகத்துச்

செய்யகமே நாற்றிசையில் தேசங்கள் செய்ய:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/92&oldid=655932" இலிருந்து மீள்விக்கப்பட்டது