பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்.மாதவி

தேர்வுநிலை விரிவுரையாளர் தமிழ்த் துறை

எஸ்.கே. எஸ். எஸ். கலைக்கல்லூரி திருப்பனந்தாள்

ஸ்ரீ காசிமடம் : தரும சாசன ஆவணங்கள்

"ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் : சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்"

வண்ணம் பாரியின் பறம்புமலை கொடைத் தன்மையில் சிறந்து விளங்கியது போன்று தான தர்மங்களால்,வடநாட்டையும், தென்னாட்டையும் தன்னகப்படுத்திப் புகழ் பெற்று விளங்குவது திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடமாகும். இம்மடத்தைப்பற்றி இற்றைக்கு இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகிதங்களில் எழுதப்பட்ட தரும சாசன நகல்கள் சிலவற்றைக் கொண்டு இவண் ஆய்வு செய்யப்படுகிறது.

கரு

தரும சாசனம்

ஏழைகட்கு அன்னதானம், வித்தியாதானம். வைத்திய உதவி அல்லது ஏதேனும் பொதுநல முன்னேற்றமான. காரியம் ஆகியவற்றிற்காகத் தரப்படுவதை அறக்கட்டளை என்பர். இதனைப் பத்திரங்களாக நிறுவிய முறை தரும சாசனம் என்று அழைக்கப்படுகிறது இதற்காகப் பொருள் கொடுத்துப் பாதுகாப்பது என்பதை இந்தியாவில் பண்டைக் காலம் முதல் சிறந்தோர் அறப்பணியாகக் கருதி வந்திருக்கிறார்கள். கொடுப்பதால் சொர்க்கமும், பாதுகாப்பதால் அமரத்துவமும் பெறலாம் என்று பாண்டிய அரசர்களுடைய கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அந்தக் ஒ காரணத்தால் பண்டைய அரசர்கள் குடிகளின் நலங்கருதிக் கோயில்கள் மசூதிகள் போன்ற பல தரும நிலையங்களை நிறுவி, அவை என்றும் அழியாமல் நிற்பதற்காக இறையிலி நிலங்களை ஏராளமாகக் கொடுத்தார்கள். அரசர்கள் செய்தது போலவே மக்களும் ஏராளமான சொத்துக்களைச் சாசனம் செய்துள்ளனர்.

இந்துமத அறக்கட்டளைகள் கோயில்கள் என்றும் மடங்கள் என்றும் இருவகைப்படும். மடங்கள் தோன்றுவதற்கு முன் கோயில்கள் தோன்றின. வழிபாடு நடத்துவதற்காகக் கோயில்களும், ஆன்மபோதனை தருவதற்காக மடங்களும் உண்டாயின. கோயில் அறக்கட்டளைகளை இருவகைப்படுத்தலாம் ஒன்று கோயில் பூசையும் திருவிழாவும் நடைபெறுதற்காக அமைவது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட பூசை, அபிஷேகம். விழாப் போன்றவற்றிற்காக அமைவதாகும்.

128

காகிதச்சுவடி ஆய்வுகள்