பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மரபு

திருவேங்கடம் பிள்ளையவர்கள் இந்து சமயங்களுக்கு இழைக்கப் பெற்ற இடையூறுகளை எதிர்த்துப் போராடியவர்: அதன் வழி மரபு ஊக்கம் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்டது. மைத்துனர் வேண்டுகோளால் தந்தைக்குப் பிறகு தாமே புதுச்சேரிக்கு வந்துற்றார்.

18ஆம் நூற்றாண்டில் இந்தியா

இந்திய வளப்பம் மற்றும் உயர்வை எண்ணிய பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த எண்ணினர்; ஆங்கிலேயர்களுக்கும் இவ்வெண்ணம் எழுந்துற்றது!

இந்திய மக்களின் அன்பினையும் உதவியினையும் பெற அழைத்தனர். அரசின் உதவியை நாடினர்; அயலவன் மூக்கை நுழைத்ததால் 'தென்னாடு' பலதிறப்பட்ட இன்னல்களுக்கு உள்ளாகியது.

பிள்ளையவர்களின் பங்கு

அறிவும் ஆற்றலும் உடையவராய், நம் நாட்டு மக்களின் நல்வளர்ச்சி நன்மைகளையே பெரிதும் விரும்பியவராய், பன்மொழி வித்தகராய், பிரெஞ்சு ஆளுகை வந்துற்ற நிலையில் அதன் சிறந்த மதி நுட்ப முடைய ஆலோசகராய். அவ்வரசினைச் சீரிய முறையில் (நமக்குத் தீங்குவராமல்) நடத்தச் செய்யும் வழிகாட்டியாய் அமைந்தார் பிள்ளை

திவான்

காரியங்கள்

ஆற்றுவதில் தம் அருமை பெருமைகளைக் காட்டியுள்ளமையை ஒலைச் சுவடியும் கையெழுத்துப் பிரதியும் எடுத்துரைக்கும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கூட்டத்தார் 'உதவிதாரராக' (வியாபாரம் பெருக) நியமிக்கப் பெற்றார். வர்த்தக விருந்தினரைப் போற்றுதல் - உபசரித்தல் ஆகியவற்றில் உதவினார். செயல் திறமையால் 'திவானாக' மாறினார்; கி. பி. 1746இல் இப்பொறுப்பு ஏற்றார்.

மக்களின் தலைவர்

அரசியல் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டார்; முரண்பாடு களைந்து சமரசம் செய்தார். நாட்டின் சிற்றரசர்களும் பிள்ளையைப் பலபடப் பாராட்டியுள்ளனர்; அவர்கள்பால் நட்பும் மதிப்பும் உடையவராகத் திகழ்ந்தார்.

கி. பி. 1749இல் 'முஸபர் ஜங்கு' எனும் அதிகாரி பிள்ளையின் உயர்வு எண்ணித் தேர்ச்சிமிக்க 3000 குதிரைகளுக்கு, அவரைச் சொந்தக்காரராய் ஆக்கி மன சுபேதார்' என்னும் பட்டமும் வழங்கினார்.

இப்பட்டம் அக்பர் காலத்தது; எனவே இப்பட்டத்தால் பிள்ளையவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 24,000 ரூபாய் வருமானம் கிட்டியது. நேர்மை உழைப்பால் வஜாரத ராய விஜயர்' எனும் பட்டம் பெற்றார்.

142

காகிதச்சுவடி ஆய்வுகள்