பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'எனது பர்மா வழி நடைப் பயணம்' எனும் இந்நூல். ஆசிரியர் ஏறத்தாழ 10 ஆண்டுகள் பர்மாவில் தங்கி, வாழ்ந்து, வணிகத்தை மேற்கொண்டு, தமிழ்ப் பணி செய்து மாத இதழ் ஒன்றினை நடத்தி, திடீரெனத் தோன்றிய இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் பர்மா நகரினை விட்டு நீங்கி தமிழகம் வந்து சேர வேண்டியிருந்த போது ஏற்பட்ட அனுபவங்களை இலக்கியமாகப் படைத்துள்ளார். இக்கட்டுரை அவர் கண்ட அனுபவங்களை ஆராய்கின்றது.

நூலாசிரியர்

வெ. சாமிநாத சர்மா இந்திய அரசியல். வரலாறு, ஆன்மீகம், சிறுகதை. நாடகம். கட்டுரை. கவிதை. மொழி பெயர்ப்பு எனப் பல்வேறு துறைகளில் இவர் சான்றாண்மை பெற்றவராக இருந்தார். மேலும் இவரது ஆங்கிலப் புலமை பன்னாட்டு வரலாறுகளையும், அந்நாட்டுத் தலைவர்கள் தம் நூல்களையும் தமிழுக்கும் தமிழர்க்கும் அறிமுகம் செய்தது. தேசபக்தன், நவசக்தி. சுயராஜ்யா, குமரி மலர், பாரதி போன்ற இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் பர்மாவில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, பண்டித நேருவின் வாழ்த்துக்களுடன் 'ஜோதி' பத்திரிகையைத் தொடங்கி நடத்தும் போது பெற்றார். இதில் இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட புனை பெயர்களில் பல்வேறு பொருள்கள் குறித்தும் எழுதி வந்தார். இதில் தலையங்கமும், கேலிச் சித்திரங்களும் முக்கியம் வாய்ந்தவையாக மக்களால் புகழப் பட்டிருந்தன. ஆசிரியர் திரு. வி. க. விடம் பக்தி கலந்த அன்பும் நட்பும் கொண்டிருந்தார். வ. வே. சு. ஐயரிடமும் சுப்பிரமணிய சிவாவிடமும் பாரதியாரிடமும் நட்புப் பூண்டிருந்தார். தேசப்பற்று மிக்க தமிழ் இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். பயணநூல்பற்றிய பாராட்டுரைகள்

ம.பொ.சி.

“மரண யாத்திரை கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவுக்கு வரவில்லை. பர்மாவாழ் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை முறைப்படுத்தி, காரண காரியங்களோடு ஆசிரியர் சர்மா இந்நூலில் விளக்கியுள்ளதைப் படித்தபோது பலவிடங்களில் அழுதேன்" 4

என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்நூல் காலா காலத்திற்கு அழியாத நூல்; பயண இலக்கியம் என்ற முறையில் நோக்கினாலும் சரி, வரலாற்று நூல் என்று கூறினாலும் சரி, தமிழ் நாட்டிற்குக் கிடைத்த ஓர் அரிய நூல் "5

என அமுதசுரபி விககிரமன் பாராட்டியுள்ளார்.

4

5

156

"மன உணர்ச்சிகளுக்கு இனிய தமிழில் வடிகால் அமைத்துப் பயன்தரும் பயண இலக்கிய நூலைச் சர்மா படைத்தளித்துள்ளார். 'நூலின் பெரும்பகுதியில் தன்னுணர்ச்சி வெளிப்பாட்டின்

ம பொ சி . எனது பர்மா வழிநடைப் பயணம். அணிந்துரை விக்கிரமன எனது பர்மா வழிநடைப் பயணம் முன்னுரை

காகிதச்சுவடி ஆய்வுகள்