பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்று சொன்னதாக அர்த்தமாகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அவர்களுக்கும் நமக்கும் எவ்வித பேதமும் இல்லை.அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரே குழாயில் தண்ணீர் பிடிக்கிறோம். ஒரே தெருவில் வசிக்கிறோம். ஒரே தொழிலையே செய்கிறோம். நமக்குள் என்ன பேதம்? நம்மிடையே பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. இந்த எனது முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்றார்.

பார்ப்பணீய ஒழிப்புத் திட்டம் தந்த பெரியாரின் பாதையில் செல்வோம். அதில் தவறில்லை என்கிறார் அண்ணா.

பொரியாரின் சிறப்புகள்

பெரியார் காஞ்சிபுரத்திற்கு இரண்டாவது முறை வந்தார். அப்போது வேறு எவரும் பேசாத அளவிலும் முறையிலும் பெரியார் அண்ணாவை ஏசினார். அதற்காகச் சிறிதும் வருத்தப்படாத அண்ணா பெரியாரின் சிறப்புகள்பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

பெரியார் மூலம் புராணப்புரட்டு. புரோகிதப் புரட்டு, இதிகாசப் புரட்டு. காங்கிரசைப் புரட்டு என்பனவற்றுக்கெல்லாம் எதிர்ப்புரை. மறுப்புரை வழங்கியவரை அண்ணாவை ஏசும் நிலைக்கு ஆளாக்கி விட்டனர். பெரியாருக்கு இன்றுள்ள செல்வாக்கு சாமான்யமானதல்ல. அதை ஈட்டிட அவர் ஆற்றியுள்ள அரும்பெரும் பணியும் அபாரம். எதற்கும் அஞ்சுபவரல்ல. எதிர் நீச்சலில் பழகியவர். கொடி கோட்டை வாசலில் உள்ளதைக் கொளுத்த வேண்டுமென்றாலும். அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தைப்பற்றித் துளியும் கவலைப்படாதவர். அது அவரின் சேவையால் கிடைத்ததல்ல. இயற்கையான சுபாவம் அவரின் கண்களில் போபத்தையும் அலட்சியத்தையும் கண்டாலும். ஒருபோதும் பயத்தைக் கண்டதில்லை. அவரைப் பல கோணங்களில் பார்த்தவன். பல பிரச்சனைகள் குறித்த அவருடைய பிரத்யேகக் கருத்துக்களை அறிந்தவன். அவரிடம் மேஸ்திரி வேலையல்லவா பார்த்தேன் என்கிறார் அண்ணா? எனவேதான் திராவிடர் கழகத்தில் வகுக்கப்படும் போர்த் திட்டம் அவருடைய ஆற்றலை அளவு கோலாகக் கொண்டு மட்டும் அமையக் கூடாது. எந்தக் கொள்கைக்காக இயக்கம் நடைபெறுகிறதோ அந்தக் கொள்கைக்குத் தீராப் பகையைத் தேடிப் பெறுவதாக இருத்தல் காது. பரவலான அளவில் செல்வாக்கு பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில் உள்ளவர்களின் உள்ளத்திலும் பரிவு ஊட்டக் கூடியதுமாகத் திட்டம் இருக்க வேண்டும் என அண்ணா குறிப்பிடுகிறார். இக்கருத்து திராவிடர் கழகத்தில் இருந்த போதும் அதை விட்டுப் பிரிந்த பிறகும் அண்ணாவிடம் உள்ளது. பெரியாருக்குள்ள அஞ்சாமையும், எதிர் நீச்சுத் தன்மையும் எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும் இவருக்கு மட்டுமே உண்டு. திராவிடர் கழகத்துக்கு இல்லை எனப் பெரியாரும் நம்பாததால்தான் என்னையே நம்பி இதிலே கொடி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபடுகிறேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

2. அண்ணாவின் கடிதங்கள் முதல் பகுதி. கடிதம் 13. ப 123.

காகிதச்சுவடி ஆய்வுகள்

165