பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இங்ஙனம் எண்ணற்ற கையெழுத்து இதழ்கள் கையெழுத்தில் இலக்கியம் படைத்தன. இவைகளை முறைப்படுத்தித் திரட்டி ஆய்வு செய்யவும், திறனாய்வு செய்து தொகுக்கவும், பாதுகாக்கவும் வேண்டியது தமிழ்ச் சமுதாயத்தின் பொறுப்பு ஆகும்.

2: 4 தமிழில் காகிதக் கையெழுத்து இதழ்கள்

தமிழ் மிகவும் தொன்மையான மொழி; எத்தகைய செய்தியானாலும் வெளியிடும் ஆற்றல் பெற்ற மொழி. தமிழில் 1977 முதல் 1997 வரை வெளிவந்துள்ள காகிதத்தில் எழுதப்பட்ட தமிழ் இதழ்கள் குறித்த விவர அறிவிப்பு வருமாறு: தமிழில் கையெழுத்து இதழ்கள் 1977 முதல் 1997 வரை வெளிவந்த ஊர்கள் தமிழில் கையெழுத்து இதழ்கள் பின்வரும் ஊர்களிலிருந்து வெளி வந்தது கண்டறியப்பட்டது.

விசயபுரம் வடக்கு. செல்லூர், சூலேஸ்வரன்பட்டி நாகர்கோவில். நாச்சியார் கோவில், படந்தாளுமூடு, தொப்பம்பட்டி, பூதப்பாண்டி. ஆரல்வாய்மொழி. வந்தவாசி, விழுப்புரம், பனங்காளை. இரையுமன்துறை. செங்குன்றம். மதுரை. ஆவத்திபாளையம். வெல்லமடம். குலசேகரம், மேல்பட்டி. கே. சாத்தனூர். திருமங்கலம். தேவகோட்டை. அம்பூர், திருச்சிராப்பள்ளி, அடையாறு. பேரணாம்பேட், சிதம்பரம். திருப்பரங்குன்றம், திருவானைக்காவல், அனிக்குறிச்சி. மணப்பாறை, வல்லம், வடகரை, ராமேஸ்வரம், திருப்பத்தூர். சிருதலைப்பூண்டி

இவ்வூர்கள் தமிழ் நாட்டின் பின் வரும் மாவட்டங்களைச் சார்ந்தன.

புதுக்கோட்டை, தஞ்சை, கோவை. கன்னியாகுமரி, வடஆற்காடு, தென் ஆற்காடு. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம்.

தமிழ் அன்பர்கள் தாராவி, செம்பூர், பம்பாய், ராபர்சன்பேட் கர்நாடகம். புதுச்சேரி மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய இடங்களிலிருந்தும் தமிழில் கையெழுத்து இதழ்கள் வெளியிட்டனர்.

2: 5 1977 முதல் 1997 வரை தமிழில் கையெழுத்து இதழ்கள் நடத்திய அன்பர்கள்

மக்களின் சிந்தனை வெளிப்பாடாக இலக்கியம் முகிழ்த்தது. அதன் ஒரு ஊடகமாக இதழ்கள் வெளிவந்தன. இவ்விதழ்களைப் பின்வரும் தமிழ் அன்பர்கள் வெளிக் கொணர்ந்தார்கள்.

திருவாளர்கள் எம். எஸ். கோவிந்தராசன். கோமகன், ஓவியர் கானரசிவா, நசன். பி. விக்டர் வீரமணி, த. சிந்து குமார், கி. பாக்கிய

காகிதச்சுவடி ஆய்வுகள்

187