பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க.தனலெட்சுமி

ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

மராத்தியர் கால வழக்குகளும் தண்டனைகளும்

போசள குலத்தைச் சார்ந்த மராத்திய மன்னர்கள் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு கி. பி. 1676 முதல் கி. பி. 1855 வரை 13 அரசர்கள் 180 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் காலத்தில் நீதி மன்றங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை அறிய மோடி ஆவணங்கள் தக்க சான்றுகளாக விளங்குகின்றன. மராத்தியர் கால நீதிமன்றங்களில் எவ்வகையான வழக்குகள் நடைபெற்றன என்றும் அதற்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது

நீதிமன்ற முறைகள்

நாயக்கர்களைப் பின்பற்றி மராத்திய மன்னர்கள் நீதி வழங்கினர். தொடக்க காலத்தில் நாட்டின் நிர்வாகத் தலைவராக இருந்த அரசரே நீதியின் பிறப்பிடமாக விளங்கினார் நாடு பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எனவே சுபேதார், அமல்தார், மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கின. பின்னர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பெற்றன.

மராத்திய மன்னர் ஷாஜி சிவில், கிரிமினல் நீதிமன்றங்களை முதலில் ஏற்படுத்தினார் பின்னர்ப் பிரதாப்சிங் நீதிமன்றங்களை ஏற்படுத்தித் தலைநகரில் நீதிபதியையும் அவருக்கு உதவியாக நீதிமன்ற ஆணைகளைப் பதிவு செய்து வைப்பதற்காகக் கணக்குப் பிளளையையும் நியமனம் செய்தார் இந்த நீதிமன்றம் வழக்குகளை விசாரித்து அரசரிடம் மேல்முறையீட்டிற்காக அனுப்பியது. அமர்சிங் காலத்தில் நீதி நிர்வாகமுறை மிகவும் ஊழல் நிரம்பியதாகவும், சீர்கெட்ட நிலையினதாகவும் விளங்கியது. நீதிபதிகள் ஒழுக்கமற்றவர்களாக இருந்தனர்.

அமர்சிங்கிற்குப் பின்னர் வந்த இரண்டாம் சரபோசி ஊழல்களை நீக்கி நாட்டின் நிர்வாகத்தைச் சீர் திருத்தி அமைத்தார் இதனால் நீதிமன்றங்கள் மீண்டும் பொலிவு பெற்றன. சரபோசி அரசரான பின்பு கி. பி. 1800இல் நான்கு நீதிமன்றங்கள் காகிதச்சுவடி ஆய்வுகள்

220