பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சரபோசியின் பாதுகாப்பாளராக விளங்கிய அருள்திரு சுவார்ட்ஸ் சென்னை அரசாங்கத்திற்கும் தஞ்சாவூருக்குமிடையே செயல்பட்டார். அமர்சிங்கை மேன்மைப்படுத்தியதற்காகத் தனிநபர் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ள ஆர்ச்சிபால்டு மறுத்து விட்டார்.25

திருச்சிராப்பள்ளியை ஒப்படைத்து விடுவதாக ஆர்காட்டு நவாபிற்கும் மைசூர் மன்னர்க்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை காணப்படுகிறது.26 சிவகங்கை பாளையக்காரர் சின்ன மருதுவுக்கு எதிராகப் படையெடுப்பது குறித்து எப். ரஸல் (F. Russell) எழுதிய விளக்கக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத்தகைய ஆவணங்களை ஆராய்கின்ற நிலையில் பல மன்னர்களின் வரலாறு புனரமைப்பும் புதுப்பொலிவும் பெறும் என்பதில் ஐயமில்லை.

ஹைதர் அலியைப்பற்றி ஏறத்தாழ 100க்கு மேற்பட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன. சான்றாக. ஹைதர் அலி மற்றும் மராட்டியர் பற்றிய குறிப்புக்கள், ஹைதர் அலியுடன் பிரஞ்சுக்காரர்களின் கடிதத் தொடர்புகள், தஞ்சாவூர் மன்னருக்கும் ஹைதர் அலிக்குமிடையேயுள்ள சதி ஆலோசனை போன்றவை 1770இல் எழுதப்பட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன.27

,30

1781இல் போர்த்துக்கீசியருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே நிகழ்ந்த புகழ்பெற்ற உடன்படிக்கை.28 கடல் கொள்ளைக்காரர்களில் ஹைதர் அலியின் கப்பல்களுள் ஒன்று கைப்பற்றல்.29 ஜன. 30. 1783இன் ஹைதர் அலியின் இறப்பு3 போன்றவற்றின் ஆவணங்களும் காணப்படுகின்றன. ஹைதர் அலியின் வரலாற்றைப் புனரமைப்புச் செய்ய இவ் ஆவணங்கள் பெரிதும் உதவும்.

சட்ட ஆலோசகர் எப். ரஸல் (F. Russell) குறிப்பு மற்றும் சின்ன மருதுவுக்கு எதிரான படையெடுப்புப்31 பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் நுண்படச்சுருள்

இலண்டன் மாநகரில் இந்திய அலுவல் ஆவணங்களைக் கொண்ட நூலகத்தில் இவ் ஆவணங்கள் காகிதச் சுவடிகளாக உள்ளன. இவற்றைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏறத்தாழ 14 ஆண்டுக்கு முன்னரே நுண்படச்சுருள் நிலையில் விலைக்குப் பெற்றுப் பாதுகாத்து வருகிறதென்பது வரலாற்றாசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். நுண்படச் சுருள்களாக இவ் ஆவணங்கள் உள்ளமையால் எவரும் பயன்படுத்தாத நிலையில் உள்ளன. இவ் ஆவணங்கள் தக்க ஆய்வுக் குறிப்புகளுடன் வெளியிடப்பட வேண்டும் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.

25. Vol 571 : 4.

26.

Vol. 170 : 23

27.

Vol. 105:7.

28

Vol. 157:6

29.

Vol. 158:5,

30.

Vol. 173 : 10.

31. Vol 390 : 1.

காகிதச்சுவடி ஆய்வுகள்

235