பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புவியியலைப்பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்தாக வேண்டும். பொதுவாக அந்நாட்டில்:வியியலும் உள்நாட்டு அமைப்புகளும் பற்றி நாம் அறிவோமானால் அந்நாட்டின்

வரலாற்றை ஒருவாறு கணித்து விடலாம்-

என்று இயற்கையைப்பற்றி கோ. தங்கவேலு கூறுகின்றார்.

நேரு தமது கடிதத்தில் இயற்கையைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:

இந்தியா ஒரு பெரிய நாடானாலும் உலகப் பரப்பில் அது ஒரு சிறுபகுதியாகும். நாம் வசிக்கும் இப்பூமியின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால் இதில் அடங்கியுள்ள எல்லா நாடுகளையும் இதில் வசித்த எல்லா மக்களையும்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்பூமி மிகமிகப் பழமையானது. கோடானுகோடி வருடங்கள் வயதுள்ளது. மனிதர்களுக்கு முன்பு மிருகங்கள் வாழ்ந்தன. மிருகங்களுக்கு முன்பாக உயிருள்ளவை ஒன்றுமே வசிக்கவில்லை ஒருகாலத்தில் இவ்வுலகமானது ஒரு நெருப்புப் பந்து போல எரிந்து கொண்டிருந்தது. அதன் வெப்பத்தினால் எவ்வுயிரும் பிழைக்க முடியவில்லை என்று பிராகிருத சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் எழுதிய நூல்களைப் படித்து மலைகளையும் பாறைகளுக்கிடையே படிந்து கிடக்கும் பழைய மிருகங்களின் எலும்புகளையும் (Fossils) நாம் கவனித்துப் பார்த்தால் அவர்கள் சொல்கிறபடி இருந்திருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

பண்டை வரலாறுகளை அறிந்து கொள்ளப் புத்தகங்கள் இல்லை என்றாலும் அவற்றைவிட வரலாற்றுச் செய்திகளைச் சொல்லக்கூடியவைகள் மலைகளும். குன்றுகளும், கடல்களும், நட்சத்திரங்களும், நதிகளும். பாலைவனங்களும். மிருகங்களின் கற்படிந்த உருவங்களுமாகும். இவைகள்தான் பூமியின் வரலாற்றை அறியப் பயன்படும் புத்தகங்களாகும் ஒவ்வொரு சிறு கல்லும் இயற்கைப் புத்தகத்தின் ஒரு தாளாகும்

பூமி சூரியனையும், சந்திரன் பூமியையும் சுற்றுகின்றன. பூமியைப் போலவே இன்னும் பல கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை எல்லாவற்றிற்கும் பூமி உட்படச் சூரியனைச் சேர்ந்த கிரகங்கள் என்று பெயர். சந்திரன் பூமியை ஒட்டியிருப்பதால் அதற்கு உபக்கிரகம் என்று பெயர். மற்றக் கிரகங்களுக்கும் இதேபோல் உபகிரகங்கள் உண்டு. சூரியனும் உபகிரகங்களோடு கூடிய மற்றக் கிரகங்களும் ஒன்றுசேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்கிறது. இதற்குச் சூரிய மண்டலம் என்று பெயர் சூரியன் மற்றக் கிரகங்களுக்குத் தந்தை என்ற முறையில் இருப்பதால் அம்மண்டலத்தைச் சூரிய மண்டலம் எனக் கூறுவதை இதன் மூலம் அறியமுடிகிறது.

இரவில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் வானில் தெரிகின்றன. இவற்றில் சில நட்சத்திரங்கள் சில கிரகங்களாகும் நட்சத்திரங்களைவிடக் கிரகங்கள் இப்பூமியைப் போல் அளவில் சிறியதாகும். ஆனால் நட்சத்திரங்களைவிடக் கிரகங்கள் பூமிக்கு அருகில் இருப்பதால் பெரியனவாகக் காணப்படுகின்றன. சந்திரன்

1 கோ தங்கவேலு. இந்திய வரலாறு ப 5.

254

காகிதச்சுவடி ஆய்வுகள்