பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாற்றுச் செய்திகள்

வரலாறு மாறுபட்ட கோணத்திலும் எழுதப்படலாம். வரலாற்று மனிதர்களையும் நிகழ்வுகளையும் மறு மதிப்பீடு செய்வது ஒருவகையாகும். புரட்சியினால் ஏற்படும் மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டு வரலாறு எழுதப்பட்டாலும் அதன் பின்பு ஏற்படும் அமைதியில் பழைய நினைவுகளை நாட்டுப்பற்றோடு நினைவுகூர்வது மீட்டுருவாக்கமாகும்

வரலாற்று

என்ற அறிஞர்தம் கூற்றுக்கேற்ப வரலாற்று நினைவுகளை அறிவுறுத்தும் நோக்கில் நேருவின் கடிதங்கள் அமைந்துள்ளன.

"காலமென்னும் கட்டடத்தின் மேல் கட்டப்படுவதே வரலாறாகும்.

கால வரன்முறையும். புவியியலும் வரலாற்றியலின் இரு கண்களாய் விளங்குகின்றன

இவ்வாறு வரலாற்றைப்பற்றி இயற்கை என்ற நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது முதன் முதலில் இவ்வுலகத்தில் சில விலங்குகளே இருந்தன. பின்னர்தான் ஆண்களும். பெண்களும் தோன்றினர். ஆனால் அவர்கள் இக்காலத்தவர்களைப் போல அழகாக, நாகரிகமாக இருக்கவில்லை. விலங்குகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் நடந்து கொண்டனர் சிறுகச் சிறுக அனுபவம் பெற்று ஆலோசிக்கக் கற்றுக் கொண்டனர். மனிதனுக்கு பகுத்தறிவு அதிகரிக்க அதிகரிக்க அவன் சாமர்த்தியசாலியாகவும். அறிவுள்ளவனாகவும் ஆனான் நெருப்பை உண்டாக்கவும். பூமியைத் திருத்திப் பயிர் செய்யவும். உடுக்கத் துணி நெய்யவும். குடியிருக்க வீடு கட்டவும் கற்றுக் கொண்டான். அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் வசித்ததால் நகரங்கள் ஏற்பட்டன. நகரங்கள் ஏற்படுவதற்கு முன்பு மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

நகரங்கள் வளரவே. மனிதர்கள் அழகிய பல கலைகளைக் கற்றனர். எழுதக் கற்றுக் கொண்டனர். எழுதுவதற்குக் கடிதம் இல்லாததால் அவர்கள் பூர்ஜமரத்தின் பட்டையில் எழுதி வந்தனர். இம்மரத்தை ஆங்கிலத்தில் பர்ச் என்று கூறுவதுண்டு. பனை ஓலையிலும் எழுதி வந்தனர். பண்டைக் காலத்தில் அரசர்களும். சக்கரவர்த்திகளும் தங்களுடைய அரசாட்சியைப்பற்றிய வரலாறுகளைக் கற்பலகைகளிலும். தூண்களிலும் வெட்டி வைத்தனர். அலகாபாத் கோட்டையில் அசோகருடைய பெரிய கல் தூண் ஒன்றுள்ளது அதில் இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அசோகருடைய பிரகடனம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது

மனிதனின் தோற்றமும் வளர்ச்சியும்

மனிதன் தோன்றிய தொடக்க காலத்தில் குளிர் அதிகமாக இருந்ததால்

2 N Subramanian, Historiography. p 68

3 கோ தங்கவேலு மு. கா. நூல் ப. 5

256

காகிதச்சுவடி ஆய்வுகள்