பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திராவிடர்கள் மிகவும் முன்னேற்றமடைந்து இருக்கின்றனர் அவர்கள் தங்கள் மொழியிலேயே பேசி வந்தனர். பிற நாட்டினரோடு ஏராளமாக வாணிபம் செய்து வந்தனர்.

பண்டைக் காலத்தில் மத்திய மேற்கு ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஒரு புதிய ஜாதியரான ஆரியர்கள் வளர்ச்சியடைந்து வந்தனர் சமஸ்கிருதத்தில் 'ஆர்ய' என்ற சொல்லுக்குக் கௌரவமுள்ளவன் அல்லது மேற்குலத்தில் பிறந்தவன் என்பது பொருள் சமஸ்கிருதம் பேசியதால் இவர்கள் தாம் மேற்குலத்தினர் என்று நினைத்தார்கள் உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் முதலில் ஆரிய வகுப்பில் இருந்து வந்தவர்களாவர். ஐரோப்பா. வட இந்தியா, பாரசீகம். மெசபடோமியா ஆகிய இடங்களில் உள்ள மக்கள் தற்காலத்தில் ஒருவருக்கொருவர் மாறுபட்டாலும் அவர்கள் ஒரேவர்க்கத்தைச் சேர்ந்த ஆரியவர்க்கமாவர் என்று நேரு கூறுகின்றார்.

மங்கோலியர் என்ற பெரும் இனத்தவர்கள் கிழக்காசியாவில் சீனா, ஜப்பான். திபெத் சியாம் பர்மா போன்ற நாடுகளில் பரவினர். இவர்கள் மஞ்சள் ஜாதியினர் என்று கூறுவர். இவர்கள் உருவ அமைப்பு கன்னத்தின் எலும்பு உயர்ந்தும் கண் குறுகியும் காணப்படும். ஆப்பிரிக்காக் கண்டத்தில் வாழ்பவர்கள் நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆரியர்களுமில்லாமல். மங்கோலியர்களும் இல்லாமல் கறுப்பு நிறத்தைக் கொண்டவர்கள் என்பது தெரியவருகிறது.

Father, mother என்ற எளிய வார்த்தைகள் இந்தியில் 'பிதா'. 'மாதா' என்றும் இலத்தீனில் 'பேடர்', 'மேடர்' என்றும். கிரீக்கில் 'பேடர்'. 'பீடர்' என்றும். ஜெர்மனியில் வேடர்'. 'முத்தர்' என்றும், பிரெஞ்சில் 'பேரி'. 'மேரி' என்றும் இதேபோல் பல மொழிகளிலும் கூறப்படுகின்றன மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த உலகை ஓர் ஏற்ற வீடாகச் செய்வது நம் கடமை என்று நேரு கூறுகின்றார்

பண்பாடு தொடர்பான செய்திகள்

பண்டைக்காலத்து மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் தெய்வத்தின் கோபத்தால் ஏற்பட்டது என நினைத்தனர். காடுகள. மலைகள், நதிகள், மேகங்கள் இவற்றிலெல்லாம் இறைவன் இருப்பதாக எண்ணினர் கடவுள் நல்ல குணம் கொண்டவர் என்று நினைக்கவில்லை இதற்கு மாறாகக் கடவுள் கோபம் கொண்டவர் என்பதற்கு அஞ்சி அவருக்கு அடிக்கடிப் பூசைகளும் பலகாரங்களும் கொடுத்து வந்தனர் சில நேரங்களில் பூகம்பமோ அல்லது வெள்ளமோ. கொள்ளை நோயோ ஏற்பட்டு மக்கள் இறந்து போனால் இது கடவுளின் கோபத்தினால் ஏற்பட்டது என்றெண்ணி அவரைச் சாந்தப்படுத்தப் பெண்களையும். குழந்தைகளையும் பலி கொடுத்தனர். இது கொடூரமான செயலாகும் என்று நேரு தம் கடிதத்தில் கூறுகின்றார் பயப்படும் மனிதன் எதையும் செய்யத் துணிவான் என்ற அடிப்படையில் உலகத்தில் மதம் அல்லது சமயம் இப்படித்தான் உண்டாகியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது என்கிறார்.

முன்பு விவசாயம் என்பது என்னவென்று தெரியாமல் இருந்து வந்தனர். வேட்டையாடுவதை மட்டுமே தெரிந்திருந்தனர் விவசாயத்தைக் கற்றுக்கொண்ட பிறகு காகிதச்சுவடி ஆய்வுகள்

258