பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இராசநாயக்கன் மூலம் தான் தஞ்சையில் சீர்திருத்தத் திருச்சபை 1727இன் பிற்பகுதியில் தொடங்குகிறது. இதுபற்றிய செய்திகள் பனைவோலையில் எழுதப்பட்டுள்ளன. இச்சுவடி ஜெர்மனியின் ஹல்லே (Halle) பல்கலைக்கழக ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

1728இல் தெலுங்கு ராசா என்ற மன்னர். தரங்கையிலிருந்து பிரஸ்ஸிர் (Pressier) என்ற திருத்தொண்டரை. தன் மகள் திருமணத்திற்குத் தஞ்சைக்கு அழைக்கிறார். இவர்தான் தஞ்சைக்குள் நுழைந்த முதல் லுத்தரன் திருச்சபையின் வெளிநாட்டுத் திருத்தொண்டர். இவரைத் தொடர்ந்து சுவார்ட்சு பாதிரியார் (1726 - 1798) பெர்சிவல் பாதிரியார். ஹாப்ரோ பாதிரியார் (1791 - 1827). G. U. போப் பாதிரியார் (1820 - 1908), பவர் பாதிரியார் 11813 - 1889) போன்றோர் எஸ். பி. சி. கே. எஸ். பி. ஜி என்ற திருத்தொண்டுச் சங்கங்களுடன் (Mission Boards) இணைந்து செயல்பட்டனர். இவர்கள் அவ்வப்பொழுது தலைமையகத்துக்குத் தங்களது பணியின் செயல்களை. முன்னேற்றங்களை, வளர்ச்சிகளை அறிக்கையாக அளித்து வந்துள்ளனர். இத்தகைய அறிக்கைகளை, நாட்குறிப்புகளை உலகமெங்கிலும் உள்ள பல நினைவரங்குகளிலும். ஆவணக் காப்பகங்களிலும் இன்றைக்கும் பாதுகாத்து வருகின்றனர். அவற்றுள் இராயல் டேனிஷ் நூலகம். கோப்பன்கேஹன், இலண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகம். ஜெர்மனியில் உள்ள ஹல்லே பல்கலைக்கழகம். மற்றும் ஃபிராங்கே பவுண்டேஷன் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழகம். தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பாடு தொடர்பான பல செய்திகளை வெளிக் கொணரலாம். இவ்வரிசையில் அண்மையில் கிடைத்த தஞ்சைத் திருப்பணியின் 1835ஆம் ஆண்டு ஆண்டறிக்கையாகும். இதில் பணி விவரங்களின் மூலம் அப்போதைய திருப்பணிகளையும். திருப்பணி ஆற்றும் முறைகளையும் அறியமுடிகின்றன. இவ்வாண்டறிக்கை எந்தப் பாதிரியாரால் எழுதப்பட்டது என்று அறிய-இயல வில்லை. ஆனால் 1836இல் ஹென்றி பவர் என்ற பாதிரியார் பணியாற்றியுள்ளார். ஆகவே அவர் இதனை எழுதி இருக்க முடியும் என எண்ண முடிகிறது.

1836இன் அரையாண்டு அறிக்கை

இவ்வறிக்கை 1836 சனவரி 01 முதல் சூன் 30 வரை ஓர் அரையாண்டு அறிக்கையாகவும், சூலை 01 முதல் திசம்பர் 31 வரை இரண்டாம் அரையாண்டு அறிக்கையாகவும் எழுதப்பட்டுள்ளது. தஞ்சைத் திருத்தொண்டுப் பணியானது (Tanjore Mission) நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை தஞ்சை வட்டம். இடம் பெயர்ந்து சென்றோர் வட்டம். இராசகிரி வட்டம். கொள்ளிடம் வட்டம் என்ற நான்காகும். மேலும் திருப்பணி என்பதை ஆலயம், ஆன்மிகம் என்று மட்டும் குறிக்காமல் பள்ளிகள். மாணவ மாணவியர் எண்ணிக்கை. ஆசிரியர் ஆசிரியைகளின் விவரம் அவர்களது ஊதிய விவரம். பள்ளிகளின் கட்டிட நிலை போன்ற விவரங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வட்டத்திலும் இருந்த கிராமங்கள். கிறித்தவ மக்கள், அவற்றில் ஆண்கள், பெண்கள். பள்ளியில் பயிலும் குழந்தைகள். அவர்களிடம் திருப்பணி ஆற்றிய தமிழ்ப் பாதிரியார்கள் (Nattive Priest) உபதேசியார் போன்றோர் விவரங்கள் ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

321