பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விளங்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. இவ் ஆவணங்களின் முதற்கட்ட ஆய்வுகள் ஆங்கிலேயருக்கு முற்பட்ட இந்தியக் கிராம சமுதாய அமைப்புகள் பற்றியும் அச்சமயம் அங்கு நிலவிய சமூகப் பொருளியல் நிலைகளைப் பற்றியும் மிகச் சிறப்பானதொரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பாகக் குறிக்கத்தக்கது.

முறையான நிலப்பயன்பாடு, பாசன வசதிப் பெருக்கம். அதன்வழி உற்பத்திப் பெருக்கம். அதன் முறையான பங்கீடு. அதன்வழி சமூக. சமய கலாச்சார நிறுவனங்களின் பராமரிப்பு என ஒவ்வொரு நிலையிலும் திட்டமிட்ட செயற்பாடுகளுடன் இயங்கிவந்த செங்கற்பட்டுக் கிராம சமுதாய அமைப்புகள் இந்தியக் கிராமங்களைத் தன்னிறைவில் தலைநின்று தனித்தியங்கும் கிராமக் குடியரசுகளாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன. தொடக்க கால ஆங்கிலேய அதிகாரிகளும். அறிஞர்களும் இந்தியக் கிராமக் குடியரசுகள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கைகளும் கருத்துக்களும் மேற்கூறியவற்றை அரண் செய்தல் காணலாம் அவற்றுள் சர் சார்லஸ் மெட்காவின் கருத்து இங்கு சிறப்பாக நினைவிற் கொள்ளத்தக்கது.

"கிராம சமூகங்கள் குட்டிக் குடியரசுகள். தேவையான அனைத்தையும் தங்களுக்குள் பெற்றிருந்தன. இங்கு அயலார் தலையீடு பெரும்பாலும் இல்லை. இவை மற்ற நிறுவனங்கள் வீழ்ச்சியுற்ற போதும் நிலைபெற்று நின்றுள்ளன. அரசகுல மரபுகள் பல வீழ்ச்சியுறுகின்றன: புரட்சிக்குப் பின்னர்ப் புரட்சி தோன்றுகிறது ஆயினும் கிராம சமூகம் மட்டும் அதுவாகவே நிலைபெற்றுள்ளது"

கி.பி. 1830இல் இரயத்துவாரி முறை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இவர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார் கிராம சமூகம் பற்றிய இக்கருத்து British House of Commons வெளியிட்ட ஐந்தாவது அறிக்கை (Fifth Report)யை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே. இவ்வறிக்கை கி. பி. 1795இல் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக விளங்கிய ட்சியராக விளங்கிய Place என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும். இவ்வறிக்கைக்கு மூலமாக விளங்கியவை செங்கற்பட்டு ஆவணங்களே. தற்போது இம்மூல ஆவணங்களின் ஆய்வினால் மேற்கூறிய கருத்து தெளிவும் வலிவும் பெற்றிருப்பதை உணரமுடிகிறது.

வடக்குப்பட்டு ஓலை ஆவணங்கள் மொத்தம் 35 ஏடுகளைக் கொண்டு விளங்குகின்றன. அவற்றில் 25 ஏடுகள் அவ்வூரின் தரவாரி நிலப்பிரிவுகளையும் (புறம்போக்கு நிலங்கள். மானிய நிலங்கள், வாரப்பற்று நிலங்கள்) அவற்றில் அடங்கியுள்ள பகுதிகளையும் அவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், பரப்பளவு. தன்மை ஆகியவற்றுடன் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டு அவ்வூரின் முழுவடிவமைப்பையும் காட்டி நிற்கின்றன. மேலும் வீடுகள் பற்றிய விவரங்கள் அவற்றின் எண்ணிக்கையுடன் வீதிகள், வீடு மற்றும் புழக்கடையின் அளவு. அமைப்பு அவற்றில் குடியிருந்தோரின் பெயர். சாதி, தொழில் போன்றவற்றுடன் விரிவாகச் சுட்டப்பெற்றுள்ளன. ஏனைய ஏடுகள் தீர்வை விவரங்கள் பற்றிக் கூறுவன. இவ்வகை காகிதச்சுவடி ஆய்வுகள்

365