பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இராக. விவேகானந்த கோபால் மோடி வல்லுநர்

சரசுவதி மகால் நூலகம் தஞ்சாவூர்

பிறமொழி ஆவணங்களில் மோடி

மானிட சமுதாயத்தின் வரலாறு. பண்பாடு. கலை மற்றும் அரசியல் பற்றிய தொடர் நிகழ்வினை அறிந்து பதிவு செய்வது வரலாற்றாய்வாகும். இவ்வாய்விற்கு அடிப்படைச் சான்றுகளாக அமைவன ஆவணங்களாகும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை. ஆவணங்கள் கல்வெட்டுக்களாகவும். பனையோலை மற்றும் காகிதங்களிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. மேலை நாடுகளில் சுடுமண் பலகைகள். பார்ச்மெண்ட். தோல் ஆகியவற்றில் எழுதப்பட்ட ஆவணங்களும் கிடைக்கின்றன ஆவணங்கள் எழுதப்பட்ட பொருட்கள் எவையாக இருந்தாலும். அவற்றில் சொல்லப்பட்ட செய்தியே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அச்செய்தியும் எந்த மொழியில், எவ்வகை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது மேலும் ஆய்வுக்குரியதாகின்றது. எழுதப்பட்ட பொருள். எழுத்து மொழி மற்றும் செய்தி ஆகிய இந்நான்கின் அடிப்படையில் செய்தியின் காலம். வரலாறு. அதன் பிரதிபலிப்பு ஆகியவற்றை அறியமுடிகின்றது. எனவே. ஆவணங்கள் ஒரு சமுதாயத்தைப்பற்றி ஆய்ந்தறிவதற்கு எத்தகைய முறையில் உதவுகின்றன என்பதனை இக்கட்டுரையின்வழி உணரமுடியும்.

தமிழக வரலாறும் ஆவணங்களும்

ஈராயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ் நாட்டின் அரசியல். சமுதாய, பொருளாதார. பண்பாட்டு. கலை வரலாற்றினைத் தெளிவாக அறிவதற்கு ஆவணங்கள் பெரிதும் துணைநிற்கின்றன. தமிழகத்தைத் தமிழர்களும், பல்லவர்களும், இசுலாமியர்களும், மராத்தியர்களும், பின்னாளில் ஆ ங்கிலேயர். பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் ஆகியோரும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைத் தத்தமது ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தனர். இதனால் தமிழ் நாட்டின் வரலாற்றைக் கூறும் ஆவணங்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி. இந்தி, சமக்கிருதம், பார்சி. உருது. ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் டச்சு மொழிகளில் உள்ளன. எனவே, தமிழ் நாட்டின் வரலாற்றைப்பற்றி முழுவதுமாக அறியத் தமிழ் மட்டுமன்றிப் பிறமொழி ஆவணங்களும் தேவையாகின்றன.

-சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!"

என்ற பாரதியின் வாக்கு இதனை நினைவூட்டுவதாகக் கொள்ளலாம். காகிதச்சுவடி ஆய்வுகள்

417