பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3 எழுத்துப் பெயர்ப்பில் தவறான பகுதிகள் இருப்பின் அடிக்குறிப்பில் சுட்டவேண்டும்

4

5

ஆவணத்தின் காலத்தினைக் கண்டுபிடித்து அதனை ஆங்கில நாட்காட்டி முறைக்கு மாற்றித் தருதல் வேண்டும்

ஆவணத்தில் சொல்லப்பட்ட செய்தியை அப்படியே தமிழில் தருதல் வேண்டும்

6 அதேபோன்று ஆவணத்தின் உட்பொருளை ஆங்கிலத்திலும் தருதல் வேண்டும் இதனால். பிற நாட்டவரும் அதனை அறிதல் எளிது.

7

ஆவணத்தின் உட்பொருள் தொடர்பான பிற வரலாற்று ஆதாரங்கள். நேரில் கண்ட கேட்ட செய்தி. அல்லது அதுபற்றிய பதிப்பாசிரியரின் கருத்து இவற்றை அடிக்குறிப்பில் தருதல் வேண்டும். இப்பகுதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

8. மூல ஆவணத்திலுள்ள அரும் சொற்களைத் தொகுத்து 'அருஞ்சொற்பொருள் நிரல்' தருதல் வேண்டும்.

தேவைப்பட்டால் பொருள் முதற்குறிப்பு அகராதி' அல்லது 'சொல் முதற்குறிப்பு அகராதி' போன்றவற்றையும் தரலாம்.

10 ஆவணங்கள் தொடர்பான வரைப்படங்கள். பிற மேற்கோள் நூல்கள் முதலியவற்றையும் கொடுக்கலாம்

11 19 ஆவணப்பதிப்பு முழுமையானதாக இருக்க இடஅடிப்படையிலோ, கால அடிப்படையிலோ, பொருளடிப்படையிலோ ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பித்தல் அவசியம்.

12

2 தொகுக்கப்பட்ட ஆவணங்களின் உட்பொருள் விளங்குமாறு ஒரு விரிவான பதிப்புரையும் நூலின் முகப்பில் இடம்பெறுதல் வேண்டும்.

13 ஆவணப் பதிப்பிற்கு உதவிய சான்றாதாரங்களின் பட்டியல், தகவலாளர்கள். பதிப்பில் உதவியோர் ஆகியோரின் பெயர்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டு நன்றி பாராட்டுதல் ஒரு நல்ல ஆய்வு நூலுக்கான தேவையாகும்.

-

14 அனைத்திற்கும் மேலாக அவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூலின் கையெழுத்துப்படியை அத்துறை சார்ந்த மொழியறிந்த அறிஞரிடம் கொடுத்து மதிப்பீடு செய்து கொள்வது நூலின் தரத்தினை உயர்த்துவதாக அமையும்.

நிறைவுரை

1

ஆவணங்கள் எழுதப்பட்ட பொருள் மொழி, வரிவடிவம் ஆகியவற்றின் தன்மை பற்றிய ஆய்வு அவ்வாவணத்தின் காலத்தை அறுதியிட்டுக் கூற உதவுவனவாகும்.

2 தமிழகத்தைப் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழி சார்ந்த மன்னர்கள் ஆட்சி புரிந்தமையால். அவர்தம் ஆவணங்கள் பல மொழிகளில் அமைந்துள்ளன.

420

காகிதச்சுவடி ஆய்வுகள்