பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்னர் மனம் சொக்கிப் போனார். இந்த சந்நியாசியைப் பற்றி தாம் கேட்டறிந்த பொய்யான வதந்திகளுக்காக வருந்தினார். அவருக்கு இடர் விளைவித்தவர் யார் என அறிய விரும்பினார் 'தமக்குத் துன்பம் இழைத்தவர்களை யெல்லாம் மன்னிக்க வேண்டுமென' நொபிலி சொன்ன வார்த்தைகள் மன்னரை மனம் நெகிழச் செய்தன. தம் ராஜ்ஜியத்தில் சகல உரிமைகளுடன்- இருக்கலாம் என உத்தரவிட்டார். ஒவ்வொரு மாதமும் அரசவைக்கு வந்து போகுமாறு கேட்டுக் கொண்டார். ஆர்மோனியக் கருவி வாசிப்பவரை அரண்மனையிலே வைத்துக் கொள்ள விழைந்தார். எங்கட்குப் பல உபசாரங்கள் செய்தார். இறுதியாக எங்களுக்குப் பொன்னாலான சரிகை மாலை அணிந்து மரியாதை செய்தனுப்பினார்

இவ்வாறு மன்னன் நொபிலியை அழைத்துச் சிறப்பித்ததை இக்கடிதம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கடிதத்தில்,

1644ஆம் ஆண்டு டிக்கோஷ்டா அடிகள் சேசு சபைத் தலைவருக்கு எழுதிய

“தமிழ் மக்கள், கணவன் இறந்தபொழுது பல தேவதைப்பற்றி கூறி அழும் பழக்கத்தை விட்டு இறை ஏசுவின் பாடுகள். வியாகுலத் தாயின் துன்பங்கள், சம்மனசு மக்கள் செய்த பாவங்கள். அதனால் ஏற்பட்ட தண்டனை முதலியவற்றை பற்றி செய்யூள் நூல் ஒன்றும். 2000 அடிகள் கொண்ட நித்திய வாழ்வு பற்றிய பாடல் நூலும், திருமறையைப் பற்றி எழுநூறு அடிகளில் ஒரு பாடல் நூலும் நொபிலி அவர்கள் இயற்றினார்"8

எனக் குறிப்பிடுகின்றார்.

1656ஆம் ஆண்டு அந்துவாம் பிரயோன்சா என்பவர் எழுதிய தமது மடலில். "நொபிலியின் தூஷணத்திக்காரம் என்ற நூல் எனக்கு என்றும் மிகப் பிடித்தமான நூல். இதில் நமது மதத்திற்கு எதிராக கூறும் தூஷணங்களை மறுப்பதோடு அமையாது அதற்கு விளக்கமும் கொடுக்கின்றார். சமய குருக்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்றும். முக்கியமாய் எப்படி ஞானோபதேசம் கற்பிக்க வேண்டும் என்னும் சிறிய அறிவுரையோடு இந்நூலை முடிக்கின்றார்9

இது தூஷணத்திக்காரம் என்னும் நூலைத் தத்துவபோதகரே எழுதினார் என்பதற்குச் சான்றுரைப்பது போன்று இம்மடல் எழுதப்பட்டுள்ளது.

தத்துவ போதகரின் வேண்டுகோள்

தத்துவ போதகர் தாம் இறப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பு ஒரு வேண்டுகோளைத் தாம் எழுதிய நூல்களிலெல்லாம் சேர்க்கும்படி ஒழுங்கு செய்தார் காகிதச்சுவடி ஆய்வுகள்

427