பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கு.

வெ.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

பாஸ்கர சேதுபதி ஆவணங்கள்

இராமநாதபுரம் சீமை எனவும். சேதுநாடெனவும். மறவர் சீமை எனவும் புகழ்த்திருமணந்து பொற்புற விளங்கிய தென்தமிழ் நாட்டுப் பகுதியில் இராமநாதபுரம். சிவகங்கை. திருவாடானை ஆகிய ஊர்கள் அடங்கும். இந்நிலப் பகுதியைக் கி. பி. 1605 முதல் மறவ மன் குடியினர் அரசராய் வீற்றிருந்து செங்கோல் செலுத்தினர். இம்மன் மரபில் கூத்தன் சேதுபதி. இரண்டாம் இரகுநாத சேதுபதி. கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி. பாஸ்கர சேதுபதி எனும் புகழ்மிக்க மன்னர் பலர் இடம்பெற்னர். எனினும் "மன்புகழ் நுங்கள் மரபினோர் புகழ்களெல்லாம் நின்புகழ் ஆக்கிக் கொண்டாய்” என்று கம்பன் கூறுமாறு சேதுமன்னர் யாவரினும் புகழ்மிக்க உரவோராக விளங்கியவர் பாஸ்கர சேதுபதி மன்னரேயாவர்.

பாஸ்கர சேதுபதி குறித்த ஆவணங்கள் பல கிடைத்தில. மன்னர் குடும்பத்தில் அக்கறை மிக்கவரும் தமிழ்நாட்டு வரலாற்றாசிரியருமான எஸ்.எம். கமால் பாஸ்கரரின் அன்றாடச் செலவுக் கணக்குப் பதிவேடு ஒன்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளார். இப்பதிவேடு

மதுரை திருப்பரங்குன்றம் ஆலயங்களில் வழிபாடு. ஆங்கில நீதிபதிக்கு விருந்து அளித்தது. சென்னை ராயப்பேட்டை 'உட்லண்ட்ஸ்' மாளிகையில் தங்கல், புரசை மயிலை திருவல்லிக்கேணி ஆலயங்களில் வழிபாடு, அர்ச்சகர் தேவதாசிகளுக்கு அன்பளிப்பு. ஆர்க்காட்டு நவாப் சென்னை கவர்னர். திருவனந்தபுரம். பொப்பிலி மன்னர்களது தொடர்பு. பொது நிறுவனங்களுக்கு அன்பளிப்பு, சட்ட, வல்லுநர் பாஷ்யம் ஐயங்கார். பாடகர் தட்சிணாமூர்த்தி சிவன் ஆகியோருடன் அளவளாவியது. ஷேக்ஸ்பியர் நாடகம் கண்டு களித்தது - போன்ற அன்றாட நிகழ்ச்சிகளுக்குச் செலவு செய்யப்பட்ட விவரங்களையும் இந்தப் பதிவேடு தருகிறது."

என்று குறிப்பிடுகின்றனர்.1 இப்பதிவேட்டிலிருந்து மன்னரின் கொடைக் குணமும், அரசியல் நிகழ்வுகளில் அவருக்கிருந்த அக்கறையும் திறனும் அறியப் பெறுகின்றன.

1

எஸ் எம்.கமால், மன்னர் பாஸ்கர சேதுபதி, பக 24-25

காகிதச்சுவடி ஆய்வுகள்

435