பக்கம்:காகித உறவு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

9


'நாலாயிரம் ரொக்கம். நகை போட்டா போதுமாம். திருவான்மியூர்ல மளிகைக்கடை வச்சிருக்கற பையனுக்குக் கேட்டாக என்று அம்மா சென்னாள்.

உடனே, 'நாலாயிரம் ரூபாய்க்கு எங்க போவ? ஸ்கூட்டர் கடன், பெஸ்டிவல் கடன், ஜி.பி.எப். கடன், பரீட்சை பீஸ், பால் கார்டு அது இது என்று போக பைசா மிச்சமில்லை...' என்று நீ இழுத்தாய். அம்மாவாவது சும்மா இருந்திருக்கலாம் மனம் இருந்தா மார்க்கம் இல்லாமலா போகும்? என்று சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்தாள். உன் மனைவி, தன் பங்குக்கு நாக்கை நீட்டிவிட்டாள். 'இந்த சனியங்க வந்ததிலிருந்து எனக்கு நிம்மதியில்லாமப் போச்சி. போன பிறவியில் செய்த கர்மம் எவ எவளுக்கெல்லாமோ இங்கு அழனுமாம்; வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா இப்படி வாய்க் கொழுப்பு இருக்குமா? கிழவிக்கு மாப்பிள்ள பார்க்க முடியுமா? மனதிருந்தாலும், கிழடா போனவளுக்கு வாலிபன் கிடைக்கறது லேசா? என்று கொட்டினாள்.

நீயாவது அண்ணியைத் தடுத்துக் கேட்டிருக்கலாம் அண்ணன் தடுக்கவில்லையே என்ற ஆத்திரத்தை நானாவது அடக்கியிருக்கலாம். என்னால் இயலவில்லை.

நானும், 'அம்மா சொன்னதுல என்ன அண்ணி தப்பு? மனம் இருந்தா மார்க்கமும் தானாக வரும். நீங்க போட்டிருக்கிற நகைய எனக்குப் போடப்படாதா? சின்னப் பொண்ணு ஸ்டெல்லாவின் சங்கிலியைத் தரப்படாதா, ஜடமா இருக்கிற ஸ்கூட்டர வித்து இந்த ஜடங்கள கரையேத்தக் கூடாதா? அப்படியே இல்லாவிட்டாலும் பி.ஏ. படிச்ச நீங்க, கொஞ்ச நாளைக்கு வேலைக்குப் போயி எங்களுக்கு வழி பண்ண முடியாதா? அண்ணன் ஒரு நாளைக்கு மூணு ரூபாய்க்கு மூணு பாக்கெட் சிகரெட் பிடிக்காரு தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணனும் என்கிற வைராக்யத்துல அத. விட்டா மாசம் நூறு ரூபாய் தேறும். போகட்டும். பப்பிக்கு முப்பது ரூபாய் செலவுல டான்ஸ் முக்கியமா? பதினைஞ்சு ரூபாய் தந்தா டைப்ரைட்டிங் கத்து, நான் வேலைக்குப் போயி, எனக்கு நானே ஒரு வழி பண்ணியிருப்பேன். முடியாததுன்னு உலகத்துல எதுவுமே இல்ல அண்ணி மனசுதான் வேணும் என்று ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டேன்.

நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுதான். ஆனால் அதற்கு நஷ்டஈடு கொடுப்பதுபோல், அம்மா என் தலைமுடியைத் தன் கைக்குள் சுற்றி வளைத்துக்கொண்டு முதுகிலும் பிடரியிலுமாகக் கொடுத்தாள். என்னைக் கோபத்தோடு பார்த்த உன் காலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/11&oldid=1383596" இலிருந்து மீள்விக்கப்பட்டது